நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகள் வருவதை முன்னிட்டு கோவையில் பெண்களுக்கான பிரத்தியேகமான ஆடை அணிகலன்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
'ரங்' என்ற பெயரில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தாஜ் விவந்தா ஹோட்டலில் நடைபெறும் இந்த கண்காட்சியில், இந்தியா முழுவதிலும் இருந்து வந்திருந்த விற்பனையாளர்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.
இதில் சேலைகள், சுடிதார், மேற்கத்திய ஆடைகள், வளையல்கள் உள்ளிட்ட அணிகலன்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், வெள்ளி அணிகலன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
/indian-express-tamil/media/media_files/DiH0HDh6f2geVbukXTAr.jpeg)
/indian-express-tamil/media/media_files/BXA3oWBgnG53Hcxy3LRn.jpeg)
/indian-express-tamil/media/media_files/N5etULENhLPSfV21VPYD.jpeg)
வரும் 12 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சி தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது.
இங்கு ரூ.500 முதல் ஆடை அலங்காரப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், வெள்ளி நகைகளும் விற்பனை செய்யப்படுவதாகவும் பொதுமக்களுக்கு சிறப்பு சலுகைகள் பொருட்கள் வழங்கப்படுவதாகவும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
இந்த கண்காட்சியை மாடலிங் துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் ரிதிஷா நிவேதா, ஜூவல்லரி துறையை சேர்ந்த அபர்ணா சுன்கு, சங்கீதா பீட்டர், அமிதி நிறுவன இயக்குனர் ஸ்ரீ நிதி ரவி ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் 'ரங்' கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஆயுஷி, கரிஷ்மா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“