கோவையில் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து தனியார் தன்னார்வ அமைப்புகள் சார்பில் ஆண்டு தோறும் கோவையின் வரலாறு – கலாசாரம் ஆகியவற்றை போற்றும் வகையில் கோவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 15வது ஆண்டு கோவை விழா நிகழ்ச்சிகள் இன்று துவங்கி வரும் ஞாயிற்றுக்கிழமை (8-ஆம் தேதி) வரை நடக்கிறது.
இதன் ஒரு பகுதியாக நவஇந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற்றன. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கலந்து கொண்டனர்.
அந்த புகைப்படங்கள் இங்கே




செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“