ரகுமான் – கோவை
Coimbatore district news in tamil: கோவை அன்னூர் இந்திரா நகர் பகுதியில் அண்ணன்மார் பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இக்கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் இன்று தொடங்கியது. ஒரு வாரம் நடைபெறும் இத்திருவிழாவையொட்டி கிராம மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பன்றிகளுக்கு மாலை மரியாதை செய்து மேளதாளங்கள் முழங்க அன்னூரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
பன்றி ஊர்வலத்தை கொம்பன் ஊர்வலம் என அழைக்கும் கிராம மக்கள், இப்பன்றிகளை கோவிலில் பலியிட்டு கடவுளர்களுக்கு படைத்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாக கூறுகின்றனர். மேலும் சாலையில் மாலை மரியாதையுடன் பன்றிகள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் வினோத நிகழ்வை அன்னூர் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
#WATCH || பன்றிகளுக்கு மாலை மரியாதை… கோவையில் வினோத திருவிழா!https://t.co/gkgoZMIuaK | #Coimbatore | #festival pic.twitter.com/DdI8MLvfYn
— Indian Express Tamil (@IeTamil) August 9, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil