கோவை மாவட்டத்தில், சூரியன் எஃப்.எம் சார்பாக 'ருசியும், இசையும் உணவுத் திருவிழா' இரண்டாம் ஆண்டாக நடத்தப்படுகிறது. கொடிசியா மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்த நிகழ்வை, மூத்த மருத்துவர் ஜி. பக்தவச்சலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இந்த உணவுத் திருவிழாவில் பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டு அசைவம், சைவம் என பலதரப்பட்ட உணவுகள் விநியோகம் செய்யப்படுகிறது. குறிப்பாக, பிரியாணி, கபாப், பீட்சா, பர்கர், சாண்ட்விச், ஐஸ்கிரீம், நொறுக்கு தீனிகள், இனிப்பு ரகங்கள் உள்ளிட்ட ஏராளமான உணவுகள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதனை பொதுமக்கள் வாங்கி உண்டு மகிழ்ந்தனர்.
/indian-express-tamil/media/media_files/2025/02/09/rETv05f0kLU28VNVD0Az.jpg)
இவை மட்டுமின்றி வீட்டுக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யப்படும் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்கான இசைக் கச்சேரிகளும் நடத்தப்பட்டன. ஆடல், பாடலுடன் அரங்கேறிய இசை நிகழ்ச்சியை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
/indian-express-tamil/media/media_files/2025/02/09/fGNQvmhT5W50pUh87sK4.jpg)
வார இறுதி நாட்களை முன்னிட்டு ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் இங்கு வருகை தந்திருந்தனர்.
செய்தி - பி.ரஹ்மான்