கோவையில் சிலம்ப கலையை மீட்டெடுக்கும் விதமாக கண்களை கட்டிக்கொண்டு 6 வயது சிறுமி ஒரு நிமிடத்தில் 146 முறை சிலம்பம் சுழற்றி சாதனையை நிகழ்த்தி உள்ளார்.
கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல்ராஜ், இசைவாணி தம்பதியரின் ஆறு வயது மகள் அகல்யா. இவர் சிறு வயதிலிருந்து சிலம்பம் கலையில் ஆர்வம் கொண்டு பல்வேறு சாதனைகளை செய்து வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக அழிந்து வரும் பாரம்பரிய கலையான சிலம்ப கலையை மீட்டெடுத்து அனைவரிடமும் கொண்டு செல்லும் முயற்சியாக சிறுமி அகல்யா கண்களை கட்டிக்கொண்டு 1நிமிடத்தில் 146 முறை சிலம்பத்தை சுழற்றி சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
சிறுமியின் இந்த சாதனை துபாய் ஐன்ஸ்டின் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. ஏற்கனவே 1 நிமிடத்தில் 57 முறை சிலம்பம் சுழற்றியதை சிறுமி அகல்யா முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “