இதய நோயால் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டிருந்த நபருக்கு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டு "சி.ஆர்.டி" கருவியை பொருத்தி உயிரைக் காப்பாற்றி சாதனை படைத்துள்ளனர் கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்.
/indian-express-tamil/media/post_attachments/ab263506-8bd.jpg)
இந்த அறுவை சிகிச்சை குறித்து கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், "திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சரவணன் என்பவர் இதய நோயால் பாதிக்கப்பட்டார். அவர் திருப்பூரில் தனியார் மருத்துவமனையில் கிசிச்சை பெற்று வந்தார். இதன் பின்னர், கோவை அரசு மருத்துவமனையில் அறுவை கிசிச்சை செய்யபட்டு சி.ஆர்.டி கருவி அவருக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரின் உயிரைக் காப்பாற்றி உள்ளோம்.
மேலும் இதய நோய் உள்ளவர்கள் மருத்துவமனையில் பரிசோதனை செய்ய வேண்டும் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக கோவையில் அறிமுகம் செய்து உள்ளோம். தனியார் மருத்துவமனையில் 10 லட்சம் வரை செலவு ஆகும். ஆனால் அரசு மருத்துவமனையில் இலவசமாக கிசிச்சை அளிக்கபட்டு வருகிறது." என்று கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.