கோவை மாவட்டத்தில், ஞாயிற்றுக் கிழமைதோறும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/02/16/VQdNOfRax48yVija9rAH.jpg)
அதன்படி, இன்று 9-வது வாரமாக, கொடிசியா பகுதியில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற இந்நிகழ்வில் சுதந்திரநாச்சினி என்ற மாணவியின் கரகாட்டத்தை அனைவரும் வியந்து பார்த்தனர். இதேபோல், பறை இசை நிகழ்ச்சிகள், ரௌத்திரம் குழுவினரின் சிலம்பாட்டம், தற்காப்பு கலை போன்ற நிகழ்வுகளும் இன்று நடத்தப்பட்டன.
/indian-express-tamil/media/media_files/2025/02/16/eYKOxIg3OSNOBFF9aefT.jpg)
இவை தவிர வழக்கமாக நடைபெறும் ஃபேஸ் பெயிண்டிங், கிரிக்கெட், காகித ராக்கெட், பம்பரம், பரமபதம், உடற்பயிற்சி ஆகியவையும் இதில் இடம்பெற்றிருந்தன. தனியார் கல்லூரி மாணவர்களின் போதைக்கு எதிரான மௌன நாடகத்தை அனைவரும் பாராட்டினர்.
/indian-express-tamil/media/media_files/2025/02/16/z7vEvPOxooZ74kfPJDyZ.jpg)
இந்நிலையில், அடுத்த வாரத்துடன் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்வு நிறைவு பெறுகிறது என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.