கோவையில் கடந்த 9 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. ஆர்.எஸ்.புரம் பகுதியில் முதல் 4 வாரங்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியானது பின்னர் கொடிசியா பகுதியில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி வாரமான இன்று ஏராளமானோர் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் வருகை தந்து ஆடல் பாடல் என மகிழ்ந்தனர்.
இறுதி வாரமான இன்று வள்ளிக்கும்மி ஆட்டம் கரகம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. மேலும் வழக்கம் போல் இடம்பெறும் முக ஓவியம் பரமபதம் பம்பரம் உள்ளிட்ட விளையாட்டுகளும் இடம் பெற்றிருந்தன. இறுதி வார நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் உற்சாகமாக இதனை கொண்டாடினாலும் இன்றுடன் நிறைவடைவது வருத்தமாக இருப்பதாக தெரிவித்தனர்.
பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.