பெண் குழந்தை கல்வி விழிப்புணர்வு: நாட்டின் நான்கு எல்லைகளை குறைந்த மணி நேரத்தில் கடந்த கோவை இளைஞர்

விஷ்ணு ராம், பெண் குழந்தைகளின் கல்வியை வலியுறுத்தும் வகையில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

விஷ்ணு ராம், பெண் குழந்தைகளின் கல்வியை வலியுறுத்தும் வகையில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

author-image
WebDesk
New Update
Coimbatore

Coimbatore man travels all over India for support girl child education

பெண் குழந்தை கல்வி விழிப்புணர்வுக்காக, கோவை இளைஞர் ஒருவர் நாட்டின் நான்கு எல்லைகளை, காரில் குறைந்த மணி நேரத்தில் கடந்துள்ளார். அவரது இந்த முயற்சி மூன்று சாதனை புத்தகங்களில் இடம்பிடித்துள்ளது.

Advertisment

கோவை சாய்பாபா காலனி பகுதி சேர்ந்தவர் சைக்கிளிஸ்ட் விஷ்ணு ராம். இவர் பெண் குழந்தைகளின் கல்வியை வலியுறுத்தும் வகையில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

தற்போது விஷ்ணு ராம் பெண் குழந்தை கல்வி மற்றும் அதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், நாடு முழுவதும் நான்கு திசைகளையும் இணைக்கும் விதமாக ரவுண்ட் ட்ரிப் முறையில் கார் பயணம் மேற்கொண்டார்.

சென்னையில் மே 28 ஆம் தேதி, காவல்துறை அதிகாரி சங்கர் கொடியசைத்து இந்த கார் பயணத்தை தொடங்கி வைத்தார்.

Advertisment
Advertisements

விஷ்ணுஅங்கிருந்து இந்தியாவின் கிழக்குப் பகுதியை நோக்கி, அருணாச்சல பிரதேச மாநிலம் தேஜு சென்றார். அங்கிருந்து வடக்கு நோக்கி காஷ்மீர் லடாக் சென்ற அவர், இந்தியாவின் மேற்கு எல்லையான குஜராத் மாநிலம் பாகிஸ்தான் பார்டரான கோட்டேஸ்வர் பகுதிக்கு சென்றார்.

பின்னர் அங்கிருந்து இந்தியாவின் தெற்கு எல்லையான தமிழ்நாட்டின் கன்னியாகுமரிக்கு சென்ற விஷ்ணு, மீண்டும் கார் பயணத்தை ஆரம்பித்த சென்னைக்கு ஜூன் 7 அன்று வந்தடைந்தார்.

publive-image

பத்து நாட்கள் மற்றும் 16 மணி நேர இந்த ரவுண்ட் ட்ரிப் பயணத்தை விஷ்ணு மேற்கொண்டார்.

16 மாநிலங்கள் நான்கு யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கி 12,226 கி.மீட்டர் தூரம் பயணித்த விஷ்ணு ராம், குறைந்த நேரத்தில் இந்தியாவின் நான்கு எல்லைகளையும் கார் பயணத்தில் கடந்த முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார்.

இந்திய நாட்டின் நான்கு எல்லைகளை குறைந்த நேரத்தில் கார் பயணம் மூலமாக கடந்த சாதனையாளர் என விஷ்ணு ராமை அங்கிகரித்து World Record Union, Asia Book of Record, India Book of Record  விருது வழங்கி கெளரவித்தது உள்ளது.

மேலும் சில நேரம் 30 முதல் 35 மணி நேரம் வரை தூங்காமலும், நாளொன்றுக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே உணவு உட்கொண்டும், கரடு முரடான சாலைகள் முதல் ராஜஸ்தான் புழுதி, அருணாச்சல பிரதேச குளிர், காஷ்மீர் பனியென பல கால சூழ்நிலைகளையும் எதிர்கொண்டு  விஷ்ணு ராம் இந்த சாகச கார் பயணத்தை மேற்கொண்டு, நாட்டின் நான்கு பகுதிகளுக்கும் பயணித்து சாதனை புரிந்து இருக்கின்றார்.

publive-image
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் முன்னிலையில் சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இப்பயணத்தின் மூலமாகவும் நண்பர்கள் உதவியுடனும் திரட்டப்பட்ட 6 லட்சம் ரூபாய் நிதியை, காசோலையாக மாவட்ட ஆட்சியரிடமும்  மற்றும் மாநகராட்சி ஆணையாளரிடம்  விஷ்ணு ராம் ஒப்படைத்தார்.

இந்த நிதி பெண் குழந்தைகளின் கல்விக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில், பெண் குழந்தைகள் பயிலும் பள்ளிக்கூடங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் செலவிட உத்தேசக்கப்பட்டிருக்கின்றன.

அடுத்ததாக பெண் குழந்தைகளின் கல்வியை வலியுறுத்தும் வகையில் சைக்கிளில் நான்கு எல்லைகளையும் கடக்க திட்டமிட்டு இருப்பதாக விஷ்ணு தெரிவித்து இருக்கின்றார்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: