கோவை மருதமலை முருகன் கோவியில் கட்டுப்பாடு: கார், பைக்குகளுக்கு அனுமதி இல்லை

கோவை மருதமலை முருகன் கோவிலுக்கு பிப்ரவரி 20 ஆம் தேதி 6 ஆம் தேதி வரை நான்கு சக்கர வாகனம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
coimbatore Marudhamalai Murugan temple vehicle ban from feb 20 to apr 6 Tamil News

மலை படிக்கட்டுகள் வழியாகவும் - கோவில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில், பிப்ரவரி 20ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நான்கு சக்கர வாகனம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 20 ஆம் தேதி, ஏப்ரல் 6 ஆம் தேதி வரை செவ்வாய், ஞாயிறு கிருத்திகை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் இருசக்கர வாகனம் செல்ல அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மேலும் மலை படிக்கட்டுகள் வழியாகவும், கோவில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஏப்ரல் 4 ஆம் தேதி திருக்குடமுழுக்கு நடைபெற இருப்பதால் பணிகளை விரைவாக முடிக்க வேண்டி கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: