பி.ரஹ்மான் கோவை மாவட்டம்
ஆட்டோவை தொடர்ந்து டேக்ஸியிலும் நூலகம் அமைக்கவும், நல் ஒழுக்கம்பொது அறிவை மேம்படுத்த மாவட்ட காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் திட்டம்.
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு என்பது வள்ளுவன் வாக்கு. தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும். அதனடிப்படையில் நூல் படித்து அறிவை மேம்வடுத்துவது சமுதாயத்துக்கு அவசியம்.
நவீனமயமாக்கப்பட்ட இந்த உலகில் செல்போன் மற்றும் சமூக வலைதளங்களில் தாக்கத்தால் நாளுக்கு நாள் புத்தக வாசிப்பு திறன் என்பது குறைந்து வருகிறது. அந்த வகையில் புத்தக வாசிப்பை மேம்படுத்துவதற்காகவும் காவலர்களின் மன இறுக்கத்தை போக்கும் வகையிலும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் காவல் நிலையங்களில் நூலகங்களை கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கி வைத்தார்.

இது காவலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இன்று தனியார் அறக்கட்டளை மூலம் ஆட்டோ நூலகம் மற்றும் பொதுமக்கள் புத்தகம் அன்பளிப்பாக வழங்க பெட்டி ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.
துடியலூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சையது என்பவரது ஆட்டோ, பயணிக்களுக்கு பயன்படும் வகையில் தன்னம்பிக்கை சார்ந்த புத்தகங்கள், தினசரி நாளிதழ்கள்,சானிடைசனர் மற்றும் சாக்கெட்லெட் பெட்டியுடன் வடிவமைக்கபட்டுள்ளது.
இதனை துவக்கி வைத்து இது குறித்து மாவட்ட காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணனன் அவர்கள் கூறுகையில், பயணிகள் நலன் கருதி, வாசிப்புதிறனை அதிகரிக்க மாநகரம் முழுவதும் இரண்டாயிரம் ஆட்டோகளில் மினி நுாலகம் அமைக்கப்படும். மாதம் தோறும் இந்த புத்தகங்கள் மாற்றப்படும் எனவும், இந்த முன்னெடுப்பு குற்றங்களை குறைக்கவும் உதவும். மேலும் கால்டாக்ஸிகளில் நூலகம் தொடங்க முயற்சி செய்யப்படும்.” என்று மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
குறிப்பாக அசம்பாவிதங்கள் மத மோதல்கள் என பலரையும் பதட்டத்துக்கு உள்ளாகும் கோவையில் சமூகத்தை சீரழிக்கும் ஆயுதங்களில் இருந்து அனைவரையும் காத்து நல்வழிப்படுத்த நூல் எனும் பேராயுதத்தை கோவை மாநகர காவல் துறை கையில் எடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil