/indian-express-tamil/media/media_files/2025/05/08/kBho0gov8itHE2Np4aam.jpeg)
Coimbatore
கோவை கரும்புக்கடை முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான நேர்த்திக்கடன் ஊர்வலம் புதன்கிழமை (மே 7) வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி மற்றும் கரகம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தபோதும், பக்தர்களின் முகத்தில் பக்தி பரவசத்துடன் காணப்பட்டது. அப்போது, கரும்புக்கடை ஜமாத் நிர்வாகிகள் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் பக்தர்களுக்கு பழங்கள் வழங்கி உபசரித்தனர். ஆப்பிள், திராட்சை, வாழைப்பழம், தர்பூசணி போன்றவற்றை அன்புடன் ஊட்டிவிட்டனர். மேலும், தாகம் தீர்க்க ஜூஸ் வகைகளையும், குழந்தைகளுக்கு பிஸ்கட்டுகளையும் வழங்கினர். வெப்பத்தின் கடுமையை உணர்ந்து, பக்தர்கள் மீது தண்ணீர் தெளித்து குளிர்வித்தனர்.
இந்த நெகிழ்ச்சியான உபசரிப்பால் மனம் நெகிழ்ந்த பக்தர்கள், ஜமாத் நிர்வாகிகளுக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர். கரும்புக்கடை பகுதியில் நடைபெற்ற இந்த கோவில் திருவிழா நிகழ்வு, மத நல்லிணக்கத்திற்கும் சகோதரத்துவத்திற்கும் சிறந்த உதாரணமாக அமைந்தது.
- பி.ரஹ்மான், கோவை மாவட்டம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.