கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் விளையாட்டு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயில் தேர் திருவிழா நேற்று நள்ளிரவு நடைபெற்றது.
அப்போது அம்மன் சிலைகளை தலையில் ஏந்தியபடி ஜமாத் வழியாக ஊர்வலம் வந்தது. அதன் பின்பு ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி, தீச்சட்டி, பால்குடம் ஏந்தியபடி வந்தனர்.
அப்படி வந்த பக்தர்களுக்கு, கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள "தரிக்கத்துல் இஸ்லாம் ஷாபியா சுன்னத் ஜமாத்" சார்பில் தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. மேலும் பள்ளிவாசல் முன்பாக இருந்த இஸ்லாமியர்களும் பக்தர்களுக்கு குளிர்பானம் வழங்கி மத நல்லிணககத்தை வெளிப்படுத்தினர்.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த கோவில் திருவிழாக்களின் பொழுது, இஸ்லாமியர்கள் உறுதுணையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“