பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
Coimbatore: சிறுநீரகம் சார்ந்த பல்வேறு விழிப்புணர்வுகளை இந்த மாதம் முழுவதும் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனையினர் முன்னேடுத்து வருகின்றனர். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரகம் சார்ந்த பல்வேறு விழிப்புணர்வு குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது.
அப்போது கோவை கற்பகம் மருத்துவமனையின் மருத்துவ குழுவினர்களான மருத்துவ கண்காணிப்பாளர் ரங்கநாதன், சிறுநீரக மருத்துவர் ஜெரார்டு வினோத், மருத்துவர் கார்த்திக், மருத்துவர் சிவகுமார் ஆகியோர் கூறியதாவது:-
சிறுநீரகம் பாதிக்கபட்ட 38 வயதானவர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நமது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இரண்டு கிட்னிகளும் செயல் இழந்து டயாலிசிஸ் நிலையில் இருந்தார். இது குறித்து அவரது குடும்பத்தினரிடம் கூறிய பொழுது அவரது மனைவி அவருக்கு ஒரு சிறுநீரகம் தானம் அளிக்க முன் வந்தார்.
இதனை தொடர்ந்து மருத்துவமனை மருத்துவக்குழு அவர்கள் இருவருக்கும் பல்வேறு பரிசோதனைகள் செய்து பின்னர் நோயாளிக்கு நமது மருத்துவமனையில் கடந்த 10"ம்தேதி அறுவை சிகிச்சை நடைபெற்றது.
அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு புதிய சிறுநீரகம் 100 சதவீகிதம் கச்சிதமாக பொருந்தி அவரது உடலில் வேலை செய்ய ஆரம்பித்துள்ளது. நோயாளி தற்போது நல்ல நிலையில் உள்ளார். இது நமது மருத்துவமனையின் நற்பெயருக்கு மேலும் பெருமை அளித்துள்ளது என்றார்.
தொடர்த்து தற்போது உடல் உறுப்புகளின் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால் பொதுமக்களுக்கு உடல் உறுப்புகள் தானம் வழங்குவது குறித்த விழிப்புணர்வு இல்லாததால் பல்வேறு நோயாளிகளுக்கு தேவையான சிறுநீரகங்கள் கிடைப்பதில்லை. அதனால் நோயாளிகள் தனது வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் நிலைக்கு தள்ளப் படுகின்றனர். எனவே பொதுமக்கள் உடல் உறுப்புகள் தானம் வழங்க முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“