Coimbatore News Television actresses favorite fashion Designer Zara : ”ஆள் பாதி ஆடை பாதி” என்பது தான் நம்மை பார்த்தவுடன் மற்றவர்களின் மனதில் தோன்றும் முதல் எண்ணமாக இருக்கும். அழகாக, நேர்த்தியாக உடையணிந்து செல்பவர்கள் மீது எப்போதும் ஒரு நன்மதிப்பை நாம் கொண்டிருப்பது இயல்பானதாகவே இருக்கிறது. ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கில் ஃபேஷன் டெக்னாலஜி துறையில் படித்து பட்டம் பெற்று கல்லூரியை விட்டு வெளியே வருகின்றனர் மாணவர்கள். ஆனால் அனைவரும் சிறந்த ஃபேஷன் இன்ஃபுளுயென்சர்களாகவும், ஃபேஷன் டிசைனராகவும் இருக்கின்றார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
View this post on Instagram
சமீப காலமாக சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு ஆடைகளை வடிவமைத்து தரும் ஸாராவிடம், ஃபேஷன் உலகில் கால்பதிக்க என்ன தகுதிகள் தேவை என்பதை கேட்டறிந்தது தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ். இது நிச்சயமாக ஆடைவடிவமைப்பாளாராக விரும்பும் ஒவ்வொருவருக்கும் சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
View this post on Instagram
நீங்கள் இந்த துறையை தேர்வு செய்ததற்கான காரணம் என்ன?
எனக்கு விதவிதமாக ஆடைகள் அணிந்து கொள்ள பிடிக்கும் என்பதால் மிகவும் சிறிய வயதில் இருந்தே தைக்க துவங்கினேன். மேலும் என்னுடைய பட்டமேற்படிப்பும் தொழிற்துறை சார்ந்ததாக இருந்த காரணத்தால் நான் ஆடை வடிவமைப்பு துறையிலேயே என்னுடைய தொழிலை துவங்கினேன்.
மாடல் (அ) ஆடை வடிவமைப்பாளர்? இதில் நீங்கள் என்னவாக மக்கள் மனதில் பதிய விரும்புகிறீர்கள்?
ஆடை வடிவமைப்பாளராகவே மக்கள் மனதில் நான் நிலை பெற விரும்புகின்றேன். என்னுடைய ஆடைகளுக்கு ஒரு பெயரை உருவாக்க விரும்பிய காரணத்தினாலே நான் மாடலிங்கை தேர்வு செய்தேன். ஸாராவிடம் ஆடை வடிவமைப்பிற்கு வந்தால், சிறப்பான நிறங்களில் நேர்த்தியான “ஃபிட்டிங்கில்” ஆடைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை நான் உருவாக்க வேண்டும். அதைத்தான் விரும்புகின்றேன். அதனால் தான் என்னுடைய நிறுவனத்திற்கும் ஸாரா கிளாம்ஸ் ஃபிட் என்று பெயர் வைத்துள்ளேன். ஆடை என்று வந்துவிட்டால் ஃபிட்டிங் தான் எல்லாமே.
ஆடை வடிவமைப்பு துறையில் உங்களுக்கு ரோல் மாடலாக இருப்பது யார்?
ரோல் மாடல் என்று யாரும் இல்லை. ஒரு ஆடையை பார்த்தால், அதைவிட சிறப்பான வடிவமைப்பையும், சிறந்த ஆடை ரகத்தினையும் தான் நான் தேர்வு செய்வேன். தற்போது தான் இந்த துறையில் கால்பதிக்க துவங்கியுள்ளேன் என்பதால் தற்போது க்ரியேட்டிவிட்டிக்கு தான் அதிக முக்கியத்துவம் தருவேன். எனக்காக நான் ஆடைகளை வடிவமைக்க துவங்கியதால் எனக்கு ரோல் மாடல் என்று யாரும் இல்லை. ஒவ்வொரு வடிவமைப்பாளரிடம் ஒவ்வொரு விஷயம் சிறப்பாக இருக்கும். அதனை நான் வரவேற்கின்றேன்.
இந்த துறையில் கால்பதிக்கும் இளம் பெண்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
எந்த துறையை பெண்கள் தேர்வு செய்தாலும் தங்களின் சுற்றுப்புறம் தங்களுக்கான பாதுகாப்பினை தருகின்றதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அதன் பின்பு அவர்களின் கனவுகளுக்காக விடாமுயற்சியுடன் உழைக்க வேண்டும். கனவுகளை யாருக்காகவும் தொலைத்துவிட வேண்டாம்.
View this post on Instagram
இந்த துறை உங்களுக்கு போதுமான ஃபினான்ஷியல் செக்யூரிட்டியை தருகிறதா?
இந்த துறையில் ஃபினான்ஷியல் செக்யூரிட்டி இருக்கிறது. முயற்சி திருவினையாக்கும்.
சித்ராவிற்கு ஆடை வடிவமைக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது?
சித்ராவுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. சோலா மீடியாவின் தினேஷ் என்பவரை முதலில் அணுகினோம். அவருடைய நிகழ்ச்சி ஒன்றில் சித்ரா இதற்கு முன்பு சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார். எனக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது தினேஷ் தான். ஒரே ஒரு ஆடை வடிவமைப்பிற்கு அவர் வாய்ப்பு வழங்கினார். பெரம்பலூரில் நடைபெற்ற சித்ராவின் நிகழ்வை அவர் தான் ஆர்கனைஸ் செய்தார். அங்கு தான் அவர் எனக்கு சித்ராவை அறிமுகம் செய்தார். “ஒரு செலபிரிட்டி என்ற ஃபீலிங்கே இல்லாமல், மிகவும் ஃப்ரெண்ட்லியாக இருந்தார் சித்ரா. நிறைய என்கரேஜ் செய்தார்கள். புதிதாக களத்திற்கு வந்திருக்கிறீர்கள். வேற லெவலுக்கு ரீச் ஆகலாம்” என்றும் சித்ரா தான் கூறினார்.
View this post on Instagram
சமீபத்தில் யாருக்கு ஆடை வடிவமைப்பு செய்து கொடுத்தீர்கள்?
சமீபத்தில் ஆல்யா மானசாவிற்கு ஆடை வடிவமைப்பு செய்து கொடுத்தேன். சித்ராவிற்கு பிறகு, பாண்டியன் ஸ்டோர்ஸில் நடிக்கும் சுஜிதாவிற்கு ஆடை வடிவமைப்பு செய்து கொடுத்தேன். இடையில் அம்ரிதா ஐயர் போன்றோருக்கும் ஆடை வடிவமைப்பு செய்தேன். சிலர் இன்னும் லிஸ்ட்டில் உள்ளனர். கூடிய விரைவில் உங்களுக்கு தெரிய வரும்.
வாழ்நாளில் ஒரு முறையாவது இவருக்கு ஆடை வடிவமைத்து தர வேண்டும் என்று யாரை நினைக்கின்றீர்கள்?
View this post on Instagram
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனிற்கு ஒருமுறையாவது ஆடை வடிவமைப்பு செய்து தர வேண்டும் என்று விரும்புகின்றேன். நிச்சயம் ஒரு நாள் நிறைவேறும் என்று நம்புகின்றேன்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil