ஊறுகாய் விலையில் மதிய உணவு: கோவை மக்கள் ஹேப்பி!

ஒரு ரூபாய் ஊறுகாய் பாக்கெட்டின் விலையில் பசியை போக்கும் கோவை ஆர்.எஸ்.புரம் தெய்வேந்திரன் அறக்கட்டளை பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளனர்.

ஒரு ரூபாய் ஊறுகாய் பாக்கெட்டின் விலையில் பசியை போக்கும் கோவை ஆர்.எஸ்.புரம் தெய்வேந்திரன் அறக்கட்டளை பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coimbatore: One Rupee lunch R.K.DEIVENDRAN Trust Tamil News

இந்த மதிய உணவானது திங்கள் முதல் வெள்ளி வரை தேடி வரும் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

கோவையில் வெறும் ஒரு ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் சேவையை துவக்கியுள்ள தனியார் அறக்கட்டளையால் பசித்தவர்கள் பலர் பயனடைந்து வருகின்றனர். இன்றளவும் பல ஏழை எளியோர் பசியாற உணவு கிடைக்காமல் ஏக்கங்களுடன் தவித்து வருகின்றனர். இருப்பினும் கோவையை பொறுத்தவரை பல்வேறு அறக்கட்டளையினர், அமைப்பினர் மற்றும் தனிநபராக பசியால் இருப்பவர்களுக்கு உணவளித்து வந்தாலும் பெரும்பான்மையானவர்களை உணவு சென்றடைவதில்லை.

Advertisment
publive-image

இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த அறக்கட்டளை நிறுவனத்தார் பசியால் வாடுபவர்களுக்கு உணவை இலவசமாக வழங்காமல் மிக குறைந்த கட்டணமான ஒரு ரூபாயில் பசியாற்றுகின்றனர். கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தெய்வேந்திரன் அறக்கட்டளையினர் வெறும் ஒரு ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் சேவையை நடத்தி வருகின்றனர்.

publive-image
Advertisment
Advertisements

இந்த மதிய உணவானது திங்கள் முதல் வெள்ளி வரை தேடி வரும் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இதில் தக்காளி சாப்பாடு, எலுமிச்சை சாப்பாடு, வெஜிடபிள் பிரியாணி போன்ற பல வகையான வெரைட்டி சாதங்கள் 5 நாட்களும் வழங்கப்படுகிறது. இந்த உணவை பெற கோவை நகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வரிசையில் நின்று உண்டியலில் ஒரு ரூபாயை தாங்களாக செலுத்தி உணவுப் பொட்டலங்களை வாங்கிச் செல்கின்றனர். கவர்ச்சியான பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கப்பட்டுள்ள உணவுடன் 1 ரூபாய் ஊறுகாயும் வழங்கப்படுகிறது.

publive-image

மதிய உணவை வாங்கிச் செல்லும் பொதுமக்கள் ஒரு ரூபாய்க்கு ஊறுகாய் வாங்க வேண்டிய விலையில் ஊறுகாயுடன் பசியாற உணவும் கிடைக்கிறது என தங்களின் மகிழ்ச்சியை தெரிவித்தனர். இப்படி பசியோடு வருபவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு உணவளிக்கும் இந்த அறக்கட்டளையின் செயல்பாடு அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

publive-image
publive-image

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Lifestyle Coimbatore Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: