திறந்தவெளி சிறைச்சாலையில் சிக்கன் கடை திறப்பு: கோவை மக்கள் வரவேற்பு

ஒண்டிப்புதூர் திறந்தவெளி சிறைச்சாலையில் சிக்கன் கறிக்கோழி கடை திறக்கப்பட்டுள்ளது. நன்னடத்தை கைதிகள் நடத்தும் இந்த கடைக்கு பொதுமக்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது.

ஒண்டிப்புதூர் திறந்தவெளி சிறைச்சாலையில் சிக்கன் கறிக்கோழி கடை திறக்கப்பட்டுள்ளது. நன்னடத்தை கைதிகள் நடத்தும் இந்த கடைக்கு பொதுமக்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது.

author-image
WebDesk
New Update
freedom chicken

கோவை மாவட்டம் சூலூர் அருகே ஒண்டிப்புதூர் பகுதியில் கோவை மாவட்ட சிறைச்சாலையின் கிளைச் சிறை உள்ளது. இது திறந்தவெளி சிறைச்சாலை ஆகும். இந்த திறந்தவெளி சிறைச்சாலையில் உள்ள சுமார் 100 ஏக்கர் விவசாய நிலத்தில் நன்னடத்தை தண்டனை கைதிகள் விவசாயம் பார்ப்பது கால்நடை மேய்ப்பது போன்ற பணிகளை செய்து வருகின்றனர். 

Advertisment

இங்கு பயிரிடப்படும் காய்கறிகள் மற்றும் கீரைகள் பசு மாடுகளில் இருந்து பெறப்படும் பால் தயிர் ,தேங்காய் போன்றவை கோவை மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு கைதிகளுக்கு உணவுகள் தயாரிக்க இங்கிருந்து கொண்டு செல்லப்படும் பயிர்கள் பயன்படுத்தப்படும். சமீப காலங்களில் சிறை கைதிகளில் நன்னடத்தை உள்ளவர்களை வைத்து கூட்டுறவு அங்காடி ,மற்றும் பெட்ரோல் நிலையம் ஆகியவை துவங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

freedom covai

கோவை காந்திபுரம் பகுதியில் சில நன்னடத்தை தண்டனை கைதிகளால் நடத்தும் பெட்ரோல் பங்க் நல்ல முறையில் செயல்பட்டு வருவதன் தொடர்ச்சியாக ஒண்டிப்புதூர்  பகுதியில் இருக்கும் கிளைச் சிறையில் நேற்று கோழிக்கறி விற்பனை செய்வதற்காக சிக்கன் கடை திறக்கப்பட்டுள்ளது. 

Advertisment
Advertisements

freedom covai 1

ஃப்ரீடம் சிக்கன் என்ற பெயரில் புதிதாக திறக்கப்பட்ட இந்த கடையில் நேற்று கூட்டம் அலைமோதியது.  அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வரிசையில் நின்று சிக்கன் வாங்கி சென்றனர். மற்ற கறிக்கடைகளை விட சுத்தமாகவும் விலை குறைவாக உள்ளதாகவும் இது போன்ற செயல்களால் தண்டனை பெற்ற கைதிகள் மனம் திருந்தி நல்வழிப்படுத்த உதவும் என பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். வாரம் முழுவதும் கறிக்கோழி விற்பனை நடைபெறும் என அங்கிருந்த சிறை காவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: