கோவை மாவட்டம் முழுவதும் நகர்புறங்களில் மிதமான மழையும், மலைப் பகுதிகளில் அடைமழையும் பொழிந்து வருகிறது.
2/8
மழைப் பொழிவு மேகமூட்டம் என்று வானிலை காணப்படுகின்றன. இதனால் கோவை குளுகுளுவென குளிச்சியாக இருக்கின்றன.
3/8
நீலகிரி, பாலக்காடு கணவாய், மலைப் பிரதேசங்களை ஒட்டிய மாநகரமாக கோவை இருப்பதனால், கோவை குளுமைக்கு உதாரணமாக தற்போது இருக்கின்றன.
Advertisment
4/8
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5/8
இதனால் இரு மாவட்டங்களுக்கும் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
6/8
மத்திய மேற்கு மற்றும் அதனை ஓட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதையடுத்து தமிழ்நாட்டில் 12 முதல் 20 செ.மீ மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Advertisment
Advertisements
7/8
முன்னதாக தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய நான்கு தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
8/8
இதேபோல் கோவை மாவட்டம், வால்பாறை தாலுகாவிலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.