கோவையில் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த மகனின் சிறுநீரகம், கல்லீரல், கண்கள் உள்ளிட்டவற்றை பெற்றோர் தானமாக வழங்கினர்.
கோவை காளம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ஸ்ரீராம். டூவிலரில் சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால், அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதில் ஸ்ரீராம் பெற்றோர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.
இதனை அடுத்து தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி இரண்டு சிறுநீரகம், கல்லீரல், கணையம், கண்கள் தானமாக வழங்கப்பட்டது.
இவற்றில் கணையம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் மற்றும் கண்கள் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டது.
ஸ்ரீராம் உடலுக்கு உரிய அரசு மரியாதையுடன் மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவ அதிகாரிகள், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“