பொங்கல் விடுமுறைக்காக பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் கோவை மாவட்ட ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/01/11/1O5WQ5SsE7Pz1DyA1mCF.jpg)
கோவையில், வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தங்கி படிக்கும் மாணவர்கள், வேலை பார்ப்பவர்கள் என பலரும் தங்கள் ஊருக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் இயல்பை விட மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/01/11/JCjOMHN57f26iI3RTjSQ.jpg)
பெரும்பாலான மக்கள் சிறப்பு ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளனர். இதனாலும், அதிகப்படியான மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. எனினும், ரயில்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள் பேருந்துகளில் ஊருக்கு செல்ல முயற்சித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, நகரின் முக்கிய பகுதிகள் திருவிழா போல் காட்சியளிக்கிறது.
/indian-express-tamil/media/media_files/2025/01/11/5qOALz8cet8dvUir1SyJ.jpg)
செய்தி - பி.ரஹ்மான்