/indian-express-tamil/media/media_files/EMDwyXChNDBBTKZi8uSD.jpeg)
Coimbatore
கோவை பள்ளியில் கடந்த1993ஆம் ஆண்டு பயின்றமுன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள்பழைய நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.
கோவை கோட்டைமேடு பகுதியில் பழமை வாய்ந்த மன்ப உல் உலூம் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் 1993 ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி போத்தனூர் சாலையில் உள்ள ஆனந்தம் மகாலில் நடைபெற்றது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே இடத்தில் சந்தித்த மாணவர்கள் கட்டித்தழுவி தங்களது பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தனர்.
தொடர்ந்து மாணவர்கள் மேடையி்ல் ஏறிமுப்பது ஆண்டுகளுக்கு முன்னால் வகுப்பறையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பழைய விளையாட்டுகளை நினைவு படுத்தும் விதமாக பம்பரம், எறிபந்து, போன்ற விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர்.
இதில் கலந்து கொண்டவர்களுக்கு பழைய நினைவுகளை நினைவுபடுத்தும் விதமாக, பொரி உருண்டை, சீடை, நெல்லிக்காய், கமரக்கட்டு, தேன் மிட்டாய், கடலை பருப்பி,ஆரஞ்சு மிட்டாய், சக்கர மிட்டாய், தேன் மிட்டாய் போன்றவற்றை வழங்கினர்.
மேலும் நிகழ்ச்சியின் நடுவேஉடன் படித்த நண்பர்கள் சிலர் மறைந்த நிலையில் அவர்களது படத்திற்கு மாணவர்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.