கோவையைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு பள்ளி மாணவி தீப்பந்தத்துடன் கூடிய சிலம்பத்தை தொடர்ந்து மூன்று மணி நேரம் சுழற்றி சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்திக் குமார் – சத்யா. இந்த தம்பதியரின் மகளான 8 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி மைதிலி, அதே பகுதியில் உள்ள முல்லை தற்காப்பு கழகத்தில் சிலம்பம் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் மாணவியின் புதிய முயற்சியாக தீப்பந்தத்துடன் கூடிய இரட்டை சிலம்பத்தை தொடர்ந்து மூன்று மணி நேரம் சுழற்றி உலக சாதனை படைத்துள்ளார்.


சர்வதேச மகளிர் மற்றும் குழந்தைகள் அறிவியல் தினம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மைதிலி செய்த இந்த சாதனை இந்தியா உலக சாதனை – அமெரிக்கன் உலக சாதனை – யூரோப்பியன் உலக சாதனை – என மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தது உள்ளது.
மேலும் சாதனை புரிந்த சிறுமிக்கு இந்தியா புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு மற்றும் கோவை மாவட்ட தலைவர் பிரகாஷ்ராஜ் கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.
சிறுமி மைதிலிக்கு இந்தியா உலக சாதனை புத்தகத்தின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவரான சதாம் ஹீசேன் பாராட்டுகளை தெரிவித்தார்.
இச்சாதனை நிகழ்வில் முல்லை தற்காப்பு கலை துணை பயிற்சியாளர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“