/indian-express-tamil/media/media_files/2025/08/31/whatsapp-image-2025-2025-08-31-16-22-49.jpeg)
Coimbatore
கோவை: சமூக வலைதளங்களின் தீமைகள் மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவையில் கராத்தே மாணவர்கள் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.
சுண்டக்காமுத்தூரில் உள்ள பாரா மார்ஷியல் ஸ்போர்ட்ஸ் அகாடமியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், கராத்தே கலையின் குத்து மற்றும் தடுப்பு (Punch and Block) ஆகியவற்றைத் தொடர்ந்து 52 நிமிடங்கள் செய்து ஆஸம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.
இந்த சாதனையில் நான்கு வயது குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை பங்கேற்றனர். கராத்தே பயிற்சியாளரும், தேசிய நடுவருமான செந்தில் குமார் பரமேஸ்வரன் இதை ஒருங்கிணைத்தார். தொடர்ந்து சாதனை செய்த மாணவர்களுக்கு பிரபல உடற்பயிற்சியாளர் பாண்டி பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.
இந்த சாதனை குறித்து பேசிய பயிற்சியாளர் செந்தில் குமார், "கராத்தே பயிற்சி உடல் ஆரோக்கியத்தையும் மன வலிமையையும் மேம்படுத்தும். சமூக வலைதளங்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ளவும், மனதை ஒருமுகப்படுத்தவும் இது அவசியம். இன்றைய தலைமுறை மாணவர்கள் இது போன்ற விளையாட்டுகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தவே இந்த சாதனை நிகழ்வை நடத்தினோம்" என்று தெரிவித்தார்.
பி.ரஹ்மான், கோவை மாவட்டம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.