/tamil-ie/media/media_files/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-10-at-11.33.39-AM.jpeg)
Coimbatore
இந்து மதம் பசுவை புனிதமாக கருதுகிறது. கோமாதா என்று அழைக்கப்படும் பசு மாட்டின் சிறப்பை அனைவரும் அறியும் வண்ணம் விழிப்புணர்வை ஏற்படுத்த உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில், கோவை இருகூர் வெள்ளேரி அங்காளம்மன் கோவிலில் பசுவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சிவனடியார் இருகூர் நாகராஜனின் 3 வயதுடைய காரிப்பசு, முதல் முறையாக சினையுற்றதைத் தொடர்ந்து அந்த பசுவிற்க்கு பட்டாடை அணிவித்து, கழுத்து, கொம்புகளில் மலர் மாலை, வளையல் அணிவித்து பூஜை செய்யப்பட்டது.
மேலும் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, தயிர் உள்ளிட்ட 9 வகை உணவுகள் பசு மாட்டிற்கு ஊட்டப்பட்டது. பின் அனைவரும் பசுவினை பயபக்தியுடன் தொட்டு வழிபட்டனர்.
முன்னதாக தேவார திருவாசக, கைலாய வாத்ய இசையுடன் நடராஜர், சிவகாமசுந்தரி, அங்காளம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களுக்கு பிரசாரத்துடன் வளையல், தாலிச்சரடு உள்ளிட்டவைகள் கொடுக்கப்பட்டது.
பசுமாட்டுக்கு வளைகாப்பு நடத்திய போது எடுத்த படங்கள்
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
/tamil-ie/media/media_files/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-10-at-11.33.36-AM-1.jpeg)
/tamil-ie/media/media_files/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-10-at-11.33.36-AM.jpeg)
/tamil-ie/media/media_files/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-10-at-11.33.37-AM-1.jpeg)
/tamil-ie/media/media_files/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-10-at-11.33.37-AM.jpeg)
/tamil-ie/media/media_files/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-10-at-11.33.38-AM.jpeg)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.