பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
coimbatore | lifestyle கோவை அதன் சுற்றுப்புற , பகுதிகளில் உள்ள ஷாப்பிங் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே புதிய அனுபவத்தை தரும் வகையில் 'கோ க்ளாம்' விற்பனை கண்காட்சி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
ஹீனா மற்றும் ராகுல் ஆகியோர் ஒருங்கிணைப்பில் வாடிக்கையாளர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள 'கோ க்ளாம்' ஷாப்பிங் கண்காட்சி கோவை அவினாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஓட்டல் அரங்கில் தொடங்கியது.
இந்த கண்காட்சி செப்டம்பர் 15,16,17 என மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இந்த விற்பனை கண்காட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், பரிசு பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள் என ஐம்பதிற்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹீனா ராகுல், கண்காட்சி குறித்து கூறியதாவது:-
/indian-express-tamil/media/post_attachments/4f54f394-fc1.jpg)
இங்கு ஷாப்பிங் செய்ய வருபவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களுக்கான அரங்குகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான சாரீஸ், சுடிதார், அலங்கார ஆபரணங்கள்,குழந்தைகளுக்கான கைவினை பொருட்கள், பிரபல கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ஹேண்ட் பேக்குகள், பிரத்யேக டிசைனில் உருவாக்கப்பட்ட காலணிகள் பெண்களுக்கான, ஜிமிக்கி கம்மல், வளையல்,வெள்ளி அணிகலன்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் பிரபலமான பெண்களுக்கான புது டிசைன் ஆடைகள்,அணிகலண்கள் ஆகிய அனைத்தும் ஒரே கூரையின் கோ க்ளாம் விற்பனை கண்காட்சி உள்ளது' என்று அவர் தெரிவித்தார்.
சனி மற்றும் ஞாயிறு என விடுமுறை நாட்களில் நடைபெற உள்ள இந்த கண்காட்சியில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வந்து பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்கிறனர் என்பது குறிப்பிடதக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“