பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்
Siruthuli rejuvenation at Narasipuram near Coimbatore Tamil News: கோவை சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கடந்த ஜனவரி 26-ம் தேதி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.எம்.ரவி-யால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் கீழ் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். இதில் ஒரு சான்றிதழ் உடன் அவருக்கு 10 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு கோவை சிறுதுளி அலுவலகத்தில் நடைபெற்றது. சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சிறுதுளியின் முக்கிய தூண்கள் நீர் பாதுகாப்பு, காடு வளர்ப்பு, கழிவு மேலாண்மை விழிப்புணர்வு உருவாக்கம் மற்றும் விவசாயத்தை மேம்படுத்துதல் ஆகும். குளங்கள் மற்றும் உயிரிகளை தூர்வார்கள் தடுப்பணைகள் கட்டுதல் மற்றும் உருவாக்குதல் புதிய குளங்களை உருவாக்குதல் போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் 17 ஏரிகள், 20 குளங்கள், 7 ஊடுநீர் குளங்கள், 30 ஓடைகள் மற்றும் 10 தடுப்பணைகள் மூலம் 86 லட்சம் கன மீட்டருக்கு மேல் சேமிப்பு கொள்ளளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், 800-கும் மேற்பட்ட மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் அமைப்பதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. காப்புக்காடு பகுதியில் வனவிலங்குகளுக்கு குடிநீர் வழங்குவதற்கான தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.
காடு வளர்ப்பு 7 லட்சம் மரங்களை கொண்ட இடைவெளி மற்றும் அடர்த்தியான மியாவாக்கி தோட்டங்கள் நடப்பட்டுள்ளன. எங்கள் விழிப்புணர்வு முயற்சிகள் மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இரண்டு மில்லியனுக்கு அதிகமான மக்கள் பயன்படுத்தினர்.
சிறுதுளி தற்போது புதுக்கோட்டை, சிவகங்கை, ஈரோடு, கரூர், கடலூர், சென்னை போன்ற இடங்களில் நீர் சேமிப்பு பணிகளை துவங்கியுள்ளது. இனி வரும் காலகட்டத்தில் நிலத்தடி நீரில் தரத்துக்கு பெரும் சவாலாக இருக்கும் கழிவு நீரை சுத்திகரிப்பதில் கவனம் செலுத்தப்படும். தமிழக ஆளுநரிடமிருந்து பெறப்பட்ட இந்த வெகுமதி தொகையான 10 லட்சம் வன எல்லைக்கு மிக அருகில் உள்ள நரசிபுரம் பகுதியில் நீர்நிலை மேம்பாட்டு பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.
அப்பகுதியில் உள்ள பல தடுப்பு அணைகள் பழுதடைந்துள்ளதால் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளை தூர்வாரி புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்து 2000 மேக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என நம்புகிறோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.