New Update
/indian-express-tamil/media/media_files/wK8O1vrHkmfB7BjLNXie.jpeg)
Coimbatore
கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், குளக் கரைகளை அழகுப்படுத்தி வருகின்றனர்.
Coimbatore
மத்திய அரசின் ஸ்மார்ட்சிட்டி திட்டம் கோவை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெரியகுளம், வாலாங்குளம், செல்வ சிந்தாமணி குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட குளங்களின் கரைப்பகுதிகள் பலப்படுத்தப்பட்டு பல்வேறு பொழுதுபோக்கு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சமீபத்தில் கூட மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் சார்பில், நாட்டின் தெற்கு மண்டல அளவில் ஸ்மார்ட்சிட்டி திட்டப்பணியை சிறப்பாக செயல்படுத்தியதற்காக கோவை மாநகராட்சி முதலிடம் பிடித்தது.
இப்போது கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், குளக் கரைகளை அழகுப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் உக்கடம் பெரிய குளம் பகுதியில் பழைய இரும்பு கழிவுகளைக் கொண்டு அலங்கார பறவைகள் உருவாக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது
இதுகுறித்து கலைஞர் சரத் கூறும்போது, ’சென்னையில் இருந்து நாங்கள் வந்துள்ளோம். பழைய இரும்பு பொருட்களை வைத்து கடந்த முறை கார் மற்றும் ஹேண்டு பம்ப் கிராமபோன் தயார் செய்தோம். தற்போது வெளிநாட்டு பறவை தயார் செய்து வருகிறோம். ஆர்ட் வேலைப்பாடு செய்து வருகிறோம். இது இங்கு வரும் மூன்று பறவைகளை வைத்து செய்து வருகிறோம் என்றார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.