மலையாள மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் விழா வருகிற 14 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி நாடு முழுதும் பல்வேறு பகுதிகளிலும் ஓணம் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் இன்று ஓணம் விழா கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், கல்லூரியில் மாணவ மாணவிகள் அனைவரும் கேரள பாரம்பரிய முறைப்படி உடை அணிந்து வந்து அனைவரையும் கவர்ந்தனர். மேலும் கல்லூரி வளாகத்தில் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்த மாணவிகள் அத்தப்பூ கோலத்தை சுற்றி நடனமாடி மகிழ்ந்தனர். வழக்கமாக ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என கலைகட்டும் ஓணம் விழா இந்த ஆண்டு கேரள மாநிலம் வயநாடு பேரழிவை ஒட்டி பெரிய அளவிலான கொண்டாட்டங்கள் இன்றி ஓரிரு நடனத்துடன் விழாவை முடித்துக் கொண்டனர்.
மேலும் வயநாடு பேரழிவிற்கு தங்களின் பங்களிப்பாக சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதி வசூலித்து கல்லூரி முதல்வரிடம் வழங்கினர். தொடர்ந்து ஓணம் சத்யா எனப்படும் கேரள உணவு மட்டும் பரிமாறி விழாவை முடித்துக் கொண்டனர்.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“