கோவை மாவட்டத்தில் அரிய வகை கற்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட கற்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
குறிப்பாக, சீனா, ஸ்பெயின், அமெரிக்கா, பிரேசில், தாய்லாந்து, மெக்ஸிகோ, கனடா போன்ற நாடுகளில் இருந்து சுமார் 108 அரிய வகை கற்கள் இதில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.
இதில், கிரீன் ஜேட், கோல்டன் பைரேட், ரெயின்போ கார்போரண்டம், வோயிட் மூன் ஸ்டோன் உள்ளிட்ட பல விலை மதிப்பு வாய்ந்த கற்கள் இடம்பெற்றிருந்தன. மேலும், 10.75 கிலோ எடை கொண்ட மரகத பச்சைக்கல் பார்வையாளர்களின் கண்களை கவரும் வகையில் இருந்தது.
/indian-express-tamil/media/media_files/2025/01/24/qpPDKRXUURD98IFbTkf2.jpg)
அதன்படி, இரே இடத்தில் 108 அரிய வகை கற்களை காட்சிப்படுத்தியதற்காகவும், 10.75 கிலோ எடை கொண்ட மரகத கல்லுக்காகவும் உலக சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்காக புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர் டெய்லர் என்பவர் வருகை தந்து சான்றிதழ் வழங்கினார்.
மேலும், ரத்தின கற்களை கொண்டு மாணவிகள் உருவாக்கிய அணிகலன்களின் விற்பனையும் நடைபெற்றது. இதற்காக 555 அணிகலன்களை மாணவிகள் உருவாக்கியிருந்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட பார்வையாளர்கள், ஒரே இடத்தில் பல்வேறு விதமான அணிகலன்களை கண்டு ரசித்தனர்
செய்தி - பி. ரஹ்மான்