பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
Coimbatore: மரங்களின் வளர்ச்சி என்பது சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதோடு, கார்பன்-டை-ஆக்சைடை எடுத்துக்கொண்டு நாம் உயிர் வாழ தேவையான ஆக்சிஜனை நமக்கு தருகிறது. அதே போல மரங்கள் பல பறவைகள், மிருகங்கள் தங்குவதற்கு இருப்பிடமாக விளங்குவதோடு மழை பொழிவுக்கு மரங்கள் மிகவும் இன்றியமையாத ஒன்றாகவும் உள்ளது.
சுற்றுச் சூழலில் மிக முக்கிய பங்கு வகிக்கும், இத்தகைய மரங்கள், விலங்குகள் உள்ளிட்டவையினை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்திய உள் அலங்கார வடிவமைப்பாளர்களின் கோவை அமைப்பின் சார்பில் சாய்பாபா காலனி பகுதியில் சுவர் ஓவியம் வரையப்பட்டது. அந்த அமைப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 300 அடி நீளத்திற்கு சுவற்றில் தத்ரூபமாக ஓவியங்களை வரைந்து அச்சத்தினர்.
தொடர்ந்து இந்த விழிப்புணர்வு ஓவியத்திற்கு முன் நின்று பலரும் புகைப்படங்களை ஆர்வமுடன் எடுத்துச் செல்வதோடு, இந்த ஓவிய முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“