/indian-express-tamil/media/media_files/JNGtN4ymMRA7ZSqZH5yq.jpeg)
Coimbatore
கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியாக ஒலி மற்றும் ஒளிக் காட்சி மூலம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் "TNAU" கட்டிடத்தின் அழகைபன்மடங்கு அதிகரித்துள்ளது.
கோவை விழாவின் 16வது பதிப்பு ஜனவரி 2ம் தேதி தொடங்கியது.
இதன் ஒரு பகுதியாக ஜனவரி8 ஆம் தேதி வரை நகரம் முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடை பெற்று வருகிறது
இந்த ஆண்டு நகரத்தில் உள்ள சின்னமான தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கட்டிடத்தின் கம்பீரத்தை காட்சிப்படுத்த தேர்வு செய்தனர்.
இந்த கட்டிடம் பிரமாண்டமான இந்தோ-சராசெனிக் கட்டிடக்கலை வடிவமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் நேர்த்தியாக வெட்டப்பட்ட சிவப்பு மேசை வடிவ செங்கற்களால் ஆனது.
சென்னை உயர்நீதிமன்றம், மைசூர் அரண்மனை மற்றும் மும்பையில் உள்ள தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டல் கூட இந்த பாரம்பரிய வடிவமைப்பைப் கொண்டுள்ளது.
சென்னையின் செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் கவர்னர் சர் ஆர்தர் லாலி அவர்களால் செப்டம்பர் 24, 1906 அன்று கட்டிடத்திற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. இது ஜூலை 14, 1909 அன்று திறக்கப்பட்டது என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த 100 ஆண்டுகள் பழமையான கட்டிடம் காலத்தை கடந்து கம்பீரமாக நிற்கிறது.
மேலும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் பல ஆண்டுகளாக ஏற்பட்ட மாற்றத்திற்கு சாட்சியாக உள்ளது.
கோயம்புத்தூர் விழா 2024 இந்த முறை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்கட்டிடத்தை சிறப்பித்துள்ளது.
மேலும் அங்கு ஒளி மற்றும் ஒலி காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. மாலை 6:30 மணியிலிருந்து தொடங்கும் இசையுடன் கூடிய வண்ணமயமான விளக்குகள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கட்டிடத்தின் அழகை வெளிப்படுத்தும்.
இந்த ஒளி மற்றும் ஒலி நிகழ்வை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வி.கீதாலட்சுமி மற்றும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைவர்டாக்டர் கே.மாதேஸ்வரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சி 6.30மணியிலிருந்து 9.30 வரை பொதுமக்கள் கண்டு ரசிக்கலாம் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.