தென்னிந்திய தேயிலையின் வரலாறு மற்றும் பண்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் தேயிலை விழிப்புணர்வு நடைபயண பேரணி நடைபெற்றது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஆகியோரை ஒருங்கினைத்து இந்த பேரணி நடத்தப்பட்டது. இதனை ஒருங்கிணைப்பாளர் தீபக்ஷா தொடங்கி வைத்தார்.
இதில் இயற்கையாக விளையும் தேயிலை நம் உடலுக்கு தேவையான வைட்டமின், போலிக் அமிலம், பொட்டாசியம், ப்ளுரின், மேங்கனீஸ் போன்ற தாது பொருட்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ஸ் உள்ளிட்டவற்றை வழங்குகின்றன என்று கூறப்பட்டது.
இந்த பேரணியில் சுமா 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் தேயிலை விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்று எழுதப்பட்ட பதாகைகளுடன் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக தேநீர் விநியோகம் செய்யப்பட்டது.
செய்தி - பி.ரஹ்மான்