கோவையில் இருந்து அயோத்திக்கு நேற்று 4-வது சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. ஏற்கனவே 8-ம் தேதி, 13-ஆம் தேதி, 18ஆம் தேதி என மூன்று சிறப்பு ரயில்கள் அயோத்திக்கு இயக்கப்பட்ட நிலையில் நேற்று நான்காவது சிறப்பு ரயில் கோவை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது.
2-ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட 20 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் அயோத்திக்கு சென்றனர்.
கோவை ரயில் நிலையத்தில் இருந்து இரவு இந்த ரயில் புறப்பட்டது. முன்னதாக ரயில் நிலையத்தில் வள்ளி கும்மி குழுவினர், அயோத்தி ராமரின் பெருமைகளை பாடி வள்ளி கும்மி நடனம் ஆடினார். இது அங்கிருந்த பக்தர்களிடையே பெரும் ஆரவாரத்தை பெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“