பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு நவீனமாக்கப்பட்ட உக்கடம் பெரியகுளம், செல்வ சிந்தாமணி குளம், வாலாங்குளம், குமாரசாமி மற்றும் செல்வ சிந்தாமணி குளம் ஆகியவற்றை மாநகராட்சி நிர்வாகம் புனரமைத்து மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தனர்.
இதில் உக்கடம் பெரிய குளத்தின் கரையின் மீது நடைபயிற்சி பாதை, மிதிவண்டி பாதை, இருக்கையில் நிழற்குடை அமைக்கப்பட்டது. மேலும் திறந்தவெளி அரங்கம் விளையாட்டு திடல், உணவுக் கூடங்கள், படகு துறை மிதுவை உணவகம், குளத்திற்கு வரும் கழிவு நீரை சுத்தம் செய்ய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், உக்கடம் பெரியகுளம் பகுதியில் படகு இல்லம் ஆரம்பிக்கப்பட்ட இயங்கி வருகிறது. இதில் தற்போது முதலை தோற்றத்துடன் சில வசதிகள் கொண்ட படகு ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
அதில் பிறந்தநாள் கொண்டாட்டம், விருந்துகள் மற்றும் கார்ப்பரேட் நிகழ்வுகளை நடத்துவதற்கும் பயன்படுத்த வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. இந்தப் படகில் 35 பேர் அமரக் கூடிய இருக்கைகள் உள்ளது. இதற்கு ஒரு நபருக்கு 150 ரூபாய் வசூலிக்கின்றனர்.
உக்கடம் பெரியகுளம், வாலாகுளம் முழுவதும் ஒரு மணி நேரம் சுற்றி வருகின்றனர். பொதுமக்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படுகிறது. தனியார் நட்சத்திர விடுதிகள், உணவகங்கள் போன்ற இடங்களில் மட்டுமே கோவையில் பிறந்தநாள் போன்ற நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்தப் படகில் குளத்தில் நடுவே சென்று கொண்டாடி மகிழ்வது பொது மக்களிடையே மிகுந்த வர வாய்ப்பு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“