ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கோவையை சுற்றி உள்ள குளங்கள் தூர்வாரப்பட்டு, ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டு, பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சுத்தம் செய்யப்பட்ட வாலாங்குளம் ஏரியில் வலசை போகும் பறவைகள் தங்கி செல்வது பார்ப்போரின் கண்களை பரவசமடைய செய்துள்ளது.
பறவைகளின் வாழ்விடமாக மாறிய கோவை வாலாங்குளம் ஏரி..!
கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு ஆறுகள், குளங்கள், குட்டைகள் உள்ள நிலையில் ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெப்பமயமாதல் மற்றும் கழிவு நீர் நிலைகளில் கலப்பது, சாக்கடை தண்ணீரைச் சுத்திகரிக்காமல் அப்படியே குளத்தில் விடுவதாலும், குளங்களின் ஓரத்தில் பிளாஸ்டிக் குப்பைகளைக் கொட்டுவதாலும் மீன்கள் இறந்து கிடப்பதும், வலசை பறவை இனங்களும், உள்நாட்டுப் பறவைகளும் குறைவாக வந்து கொண்டு இருந்தது.
பெரிய நீர் நிலைகளைக் கொண்டு உள்ள நொய்யலின் மேற்பகுதி சுத்தமாகவும், பறவையின் வருகைக்கு ஏற்ற சூழ்நிலை, உணவு மற்றும் கால நிலையைக் கொண்டு உள்ளது. ஆனால் அதன் கீழ்ப் பகுதியில் உள்ள குளங்களில் சுகாதாரமற்ற நிலையே இருந்து வந்தது.
சிறந்த பாதுகாப்பும், அடிப்படை வசதிகளும் செய்து கொடுத்து விட்டால் வலசைப் பறவைகளுக்கு சிறந்த இடமாக இருக்கும் என இயற்கை உயிரின மற்றும் வன ஆர்வலர்களும் கோரிக்கை வைத்து இருந்தனர்.
இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் கோவையை சுற்றி உள்ள குளங்கள் தூர்வாரப்பட்டு, ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் குளங்கள், ஏரிகளை சுற்றி பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பறவைகளின் வருகையால் பொதுமக்களுக்கு நல்ல பொழுதுபோக்காக மாறியுள்ளது. இந்நிலையில் இங்கு வெளிநாட்டு பறவைகளின் வருகையும் அதிகரித்துள்ளதால் தற்பொழுது பறவைகளின் வாழ்விடமாகவும் மாறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“