18-வது கோயம்புத்தூர் விழா: தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையர்

கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பன்முக சமூக உணர்வுகளைக் கொண்டாடும் கோயம்புத்தூர் விழா பதிப்பை கோவை மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையர் துவக்கி வைத்தனர்.

கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பன்முக சமூக உணர்வுகளைக் கொண்டாடும் கோயம்புத்தூர் விழா பதிப்பை கோவை மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையர் துவக்கி வைத்தனர்.

author-image
WebDesk
New Update
Coimbatore Vizha 18th edition from Nov 14 150 programmes to light up Tamil News

கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பன்முக சமூக உணர்வுகளைக் கொண்டாடும் கோயம்புத்தூர் விழாவில் 150-க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நவம்பர் 14 முதல் 24 வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது.

கோவை மாநகரின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பன்முக சமூக உணர்வுகளைக் கொண்டாடும் விதமாக, கடந்த 17 ஆண்டுகளாக கோவையை சேர்ந்த பல்வேறு அமைப்புகளும், கோயம்புத்தூர் மக்களும் இணைந்து கோயம்புத்தூர் விழா எனும் பிரம்மாண்ட திருவிழாவை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கோயம்புத்தூர் விழாவின் 18வது பதிப்பு, 'இன்ஃபினிட்டி எடிஷன்' என்ற பெயரில்  அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் தனியார் மாலில் உள்ள திரையரங்கில் துவக்கி வைத்தனர்.

Advertisment

இந்த விழா நவம்பர் 14 முதல் நவம்பர் 24, 2025 வரை 11 நாட்களுக்கு நடைபெற உள்ளது.சுமார் 150-க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் திட்டமிடப்பட்டு நகரம் முழுவதையும் ஒன்றிணைக்கும் கருத்தை கொண்டு நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளாக - ஓவிய வீதி (Art Street),கோவை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விழா (Coimbatore Science and Technology Fest), பாரா விளையாட்டு மற்றும் சிறப்பு விளையாட்டுப் போட்டிகள் (Para Sports and Special Sports) கோயம்புத்தூரின் திறமையை வெளிப்படுத்தும் 'கோயம்புத்தூர்ஸ் காட் டாலண்ட்' (Coimbatore’s Got Talent),கோவை விழா மாரத்தான், இசை மழை, தி பிட்ச் (The Pitch),பேரணி (Rally for Resilience), விழா வீதி (Vizha Veedhi), வைப்ஸ் ஆப் செட்டிநாடு (Vibes of Chettinad) இடம் பெறுகின்றன.கோவை வேக விழா எனும் தலைப்பில் கோ-கார்ட் பந்தயம், ஆட்டோகிராஸ் சாம்பியன்ஷிப்,கார் மற்றும் பைக் சாகச நிகழ்ச்சி (Car and Bike Stunt Show), மோட்டார் பைக் பேரணி (Motorbike Rally) நடக்கவுள்ளது.

செய்தி: பி. ரஹ்மான் - கோவை மாவட்டம்.

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: