/indian-express-tamil/media/media_files/18od3NFviEcYd0wYQCH5.jpg)
Coimbatore
கோவையை சேர்ந்த பெண், ஏழு கிலோ எடையுள்ள இரும்பு சுத்தியலால் இரண்டு மணி நேரத்தில் 3000 முறை டயரில் அடித்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.
கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் துர்காம்பிகை. உடற்பயிற்சி செய்வதில் இவரது ஆர்வத்தை கண்ட கணவர் சபரீஷ், மனைவிக்கு குங்பூ பெடரேஷன் (kung fu federation) நடத்தி வரும் பாலன் என்பவருடன் இணைந்து பயிற்சி அளித்துள்ளார்.
வீட்டையும் தனது பெண் குழந்தையும் பராமரித்து கொண்டே கடுமையான பயிற்சிகள் மேற்கொண்ட துர்காம்பிகை, உடற்பயிற்சி செய்வது குறித்த பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நூதன உலக சாதனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அதன் படி ஏழு.கிலோ எடையுள்ள இரும்பு சுத்தியலால் பெரிய டயரை இரண்டு மணி நேரத்தில் 3000 முறை தொடர்ந்து அடித்து உலக சாதனை படைத்தார். இவர் செய்த இந்த சாதனை சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
இந்த சாதனை குறித்து துர்காம்பிகை கூறியதாவது; ‘உடற்பயிற்சி என்பது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் தற்போது அவசியம் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த சாதனையை செய்ய முன் வந்தேன். எனது கணவர் சபரீஷ் மற்றும் பயிற்சியாளர் பாலன் ஆகியோர் அளித்த ஊக்கமே இந்த சாதனைக்கு காரணம் என பெருமிதத்துடன் தெரிவித்தார்.
ஏழு கிலோ எடையுள்ள சுத்தியலை தூக்குவதே கடினம் என்ற நிலையில் அதனை கொண்டு 3000 முறை தொடர்ந்து டயர் மேல் அடித்து சாதனை செய்த இரும்பு பெண்மனி துர்காம்பியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.