Coimbatore | தமிழர்களின் பண்டைய கலாச்சாரம் மிகவும் செழிப்பாகவும் வீரமிக்க ஒன்றாகவும் திகழ்ந்து விளங்கியதாக பல்வேறு வரலாற்று குறிப்புகள் ஆங்கிலேயர்களின் வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பண்டைய காலத்தில் பின்பற்றப்பட்ட பல்வேறு நடைமுறைகள் தற்பொழுது உள்ள நவீன காலத்தில் பின்பற்றப்படுவதில்லை.
இதற்கிடையில் தமிழர்களின் பழங்கால பழக்க முறைகள் கலாச்சாரங்களையும் நவீன காலத்தையும் ஒப்பிட்டு தற்போதைய மக்களுக்கு கோவையை சேர்ந்த அக்கா தங்கை இருவர் பாடல்களின் மூலம் நினைவுபடுத்துகின்றனர்.
பேரூர் போஸ்டல் காலனி பகுதியை சேர்ந்த சரவணகுமார் மகாலட்சுமி தம்பதியினரின் மகள்களான ஜனிக்கா ஸ்ரீ, மற்றும் சுதிஷா ஸ்ரீ இணைந்து தமிழர்களின் பண்டைய கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் வகையில் பாடல்கள் பாடியுள்ளனர்.
இந்த பாடல், குறிப்பாக பண்டைய கால பாட்டி மருத்துவம், உணவு முறைகள், அலங்கார முறைகள், மரியாதை செலுத்தும் முறைகள், விளையாட்டு முறைகள் ஆகியவற்றை குறிப்பிட்டு பண்டைய காலத்திற்கும் நவீன காலத்திற்கும் உள்ள வித்தியாசங்களை கூறும் வகையில் அமைந்துள்ளது.
அவர்களின், பாடல் தற்பொழுது வைரலாகி வரும் நிலையில் அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
செய்தியாளர் பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“