Advertisment

கையில் தேசிய கொடி.. பிளாஸ்டிக் விழிப்புணர்வு... ஸ்கேட்டிங் மூலம் கவனம் ஈர்க்கும் சகோதரர்கள்

கையில் தேசிய கொடி ஏந்தியவாறு ஸ்கேட்டிங் செய்து பிளாஸ்டிக் தொடர்பாக தீமைகளை கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
கையில் தேசிய கொடி.. பிளாஸ்டிக் விழிப்புணர்வு... ஸ்கேட்டிங் மூலம் கவனம் ஈர்க்கும் சகோதரர்கள்

பி. ரஹ்மான் - கோவை

Advertisment

கையில் தேசிய கொடியுடன் சாலைகளில் ஸ்கேட்டிங் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் சகோதரர்கள் இணையத்தில் வைரலாகி வருகினறனர்.

கோவை கோவையை அடுத்த குப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி. இவரது மகன்கள் முரளிதரன்,கவின்தரன். மாதம்பட்டி அரசு பள்ளியில் எட்டாவது மற்றும் நான்காவது படித்து வருகினறனர். இவர்கள் இருவரும், ஸ்கேட்டிங் விளையாட்டில் மாநில, தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பல உலக   சாதனைகளையும் நிகழ்த்தி உள்ளனர்.

publive-image

இந்நிலையில் 75 நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழி (பிளாஸ்டிக்) ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கையில் தேசிய கொடி ஏந்தியவாறு ஸ்கேட்டிங் செய்து பிளாஸ்டிக் தொடர்பாக தீமைகளை கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

மூன்று நாட்கள் தொடர உள்ள இந்த பயணத்தின் முதல் முதல் நாள் மாதம்பட்டியில் துவங்கி பேரூர் வரை ஸ்கேட்டிங் செய்து சாலைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் வாகன போக்குவரத்து மிகுந்த சாலைகளில் இருவரும் ஸ்கேட்டிங் செய்து சென்றதை பொதுமக்கள் வியந்து பார்த்தனர்.

publive-image

பசுமைக்கு எதிரியாக உள்ள பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்காகவே இந்த ஸ்கேட்டிங் பயணத்தை நடத்துவதாக சிறுவர்கள் தெரிவித்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment