சளி, இருமல் மற்றும் தொண்டை புண் போன்ற பொதுவான பருவகால தொடர்பான பிரச்சனைகளுக்கு உங்களுக்கு உதவக்கூடிய பல வீட்டு வைத்தியங்கள் உள்ளன.
அப்படி குழந்தை ஊட்டச்சத்து நிபுணர் மோனா நருலா, தனது இன்ஸ்டா வீடியோவில், மஞ்சள், கருப்பு மிளகு, வெல்லம் மற்றும் நெய் ஆகியவற்றால் செய்யப்பட்ட ஒரு தீர்வை பரிந்துரைத்தார்.
’எனது குழந்தைப் பருவத்திலிருந்தே நான் முயற்சித்த, நம்பகமான வீட்டு வைத்தியம் இங்கே உள்ளது, அதை என் மகளுக்கும் கொடுக்கிறேஎன். நெய் தொண்டை கரகரப்புக்கு உடனடி நிவாரணம் அளிக்கும், அதே நேரத்தில் மஞ்சள் மற்றும் மிளகு சளி மற்றும் இருமலை எதிர்த்துப் போராட உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. வலுவான நோய் எதிர்ப்பு சக்திக்கும் இது சிறந்தது’, என்றார்.
தேவையான பொருட்கள்
1/2 டீஸ்பூன் - மஞ்சள் தூள்
1/2 தேக்கரண்டி - கருப்பு மிளகு தூள் அல்லது கருப்பு மிளகு நசுக்கியது
1 கப் தண்ணீர்
ருசிக்கேற்ப வெல்லம்
1/2 டீஸ்பூன் - நெய்
எப்படி செய்வது?
1 கப் தண்ணீர் எடுத்து அதில் கருப்பு மிளகு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். ருசிக்கேற்ப வெல்லம் சேர்த்து இந்தக் கலவையைக் கொதிக்க வைக்கவும். அதை வடிகட்டி, 1/2 டீஸ்பூன் நெய் சேர்த்து, சூடாக சாப்பிடவும்.
மஞ்சளில் பைட்டோநியூட்ரியண்ட்கள் ஏராளமாக உள்ளது மற்றும் உடலுக்கு மதிப்புமிக்க பாதுகாப்பை வழங்குகிறது, அதே நேரத்தில் அதன் முக்கிய கூறு, குர்குமின், பாக்டீரியா தொற்று சிகிச்சையில் உதவுகிறது.
நெய் உடலுக்கு வெப்பத்தை அளிக்கிறது, தொண்டைக்கு ஒரு இனிமையான விளைவை அளிக்கிறது, மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. கருப்பு மிளகு அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும், மஞ்சளின் அனைத்து நன்மைகளையும் உடல் உறிஞ்சுவதற்கு உதவுகிறது, என்று நருலா கூறினார்.
இது உண்மையில் வேலை செய்யுமா?
மருத்துவ உணவியல் நிபுணர் கரிமா கோயல், கருப்பு மிளகில் பைபரின் (piperine) உள்ளது. இந்த கலவையின் முக்கிய நன்மை குர்குமின் உறிஞ்சுதலை 2000 சதவீதம் வரை அதிகரிப்பதாகும் என்றார்.
பைட்டோநியூட்ரியண்ட் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால் மஞ்சள் வீக்கத்தை எதிர்த்துப் போராடுகிறது. எனவே காய்ச்சலின் போது ஏற்படும் உடல்வலியை கண்டிப்பாக குணப்படுத்தலாம். இது ஒரு இயற்கையான பாராசிட்டமாலாக வேலை செய்து உங்கள் உடலை ரிலாக்ஸ் செய்யும்.
நெய்யில் உள்ள கொழுப்பு அமிலங்கள் தொண்டை எரிச்சலைக் குறைக்கின்றன. எனவே தினமும் ஒரு ஒரு கிளாஸ் பருகுவது காய்ச்சல் நாட்களில் மட்டுமல்ல, சளி மற்றும் இருமலைத் தடுக்கவும் கூட பயனுள்ளதாக இருக்கும் என்று கோயல் கூறினார்.
உறங்கும் போது ஒரு சூடான கிளாஸ் ’கதா’ உடலுக்கு ஓய்வு கொடுக்க ஒரு சிறந்த தீர்வாகும். மஞ்சளில் உள்ள அமினோ அமிலம் தூக்கத்தைத் தூண்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. வெல்லமும் நெய்யும் தொண்டை எரிச்சலைத் தணிக்கும்” என்கிறார் கோயல்.
Read in English: Struggling with a sore throat? Try this remedy (with recipe)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“