மெல்லிய உடலமைப்பிற்கு டார்க் கலர்ஸ், உயரத்திற்கு ஒரே நிறம் – உடைகளின் கலர் காம்போஸ்!

Color Combos for Dress Male and Female Fashion Lifestyle உயரமான தோற்றம் பெறுவதற்கு, ஒரே நிறத்திலான உடைகள் அணியலாம்.

Color Combos for Dress Male and Female Fashion Lifestyle Tamil News
Color Combos for Dress Male and Female Fashion Lifestyle Tamil News

Color Combos for Dress Male and Female Fashion Lifestyle Tamil News : உடைகளைக்கூட ஒரு கட்டத்தில் தேர்ந்தெடுத்துவிடலாம். ஆனால், எந்த டாப்புக்கு என்ன கலர் பேன்ட் போடலாம்? எந்த நிற சல்வாருக்கு எந்த கலர் துப்பட்டா போடலாம் உள்ளிட்டவற்றில்தான் பல குழப்பங்கள் வரும். விலை உயர்ந்த ஆடைகளோ பிளாட்பார ஆடைகளோ, சரியான கலர் காம்பினேஷனில் ஆடைகள் உடுத்தவில்லையென்றால், நிச்சயம் தோற்றத்தின் அழகு குறையும்.

கலர் காம்போக்கள் எப்போதுமே டிரெண்ட் மற்றும் ஃபேஷனுக்கு ஏற்றபடி மாறுபடும். மேலும், வயது, பாலினம், ஸ்கின் டோன், கருவிழி முதல் தலைமுடியின் நிறம் வரை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கலர் காம்போக்கள் உள்ளன. அவற்றில் சில பொதுவான காம்பினேஷன்களை இங்கே பார்ப்போம்.

அடிப்படை விதிகள்:

நம் உடலமைப்பை முற்றிலும் மாற்றிக் காண்பிக்கும் மாயை உருவாக்கும் திறன் நிறங்களுக்கு உண்டு. அந்த வரிசையில்,

தடித்த உடலமைப்பைத் தருவதற்கு பிரைட் மற்றும் லைட் நிறங்கள் பயன்படுத்தலாம்.

மெல்லிய உடலமைப்பைத் தருவதற்கு டார்க் நிறங்கள் பயன்படுத்தலாம்.

உயரமான தோற்றம் பெறுவதற்கு, ஒரே நிறத்திலான உடைகள் அணியலாம்.

வெளிர் நிற ஸ்கின்டோன் கொண்டவர்கள் நிச்சயம் ஆரஞ்சு, மஞ்சள் போன்ற பிரைட் நிறங்களைத் தவிர்க்க வேண்டும்.

மாநிற ஸ்கின்டோன் உடையவர்கள் கண்டிப்பாக அதிகப்படியான டார்க் மற்றும் லைட் ஷேடு நிறங்களைத் தவிர்க்க வேண்டும்.

டார்க் நிற ஸ்கின் டோன் உடையவர்கள் டீப் பிரைட் மற்றும் டார்க் ஷேடுகளைத் தவிர்க்கலாம்.

ஆண்களுக்கான கலர் காம்போக்கள்:

வெள்ளை, பேபி பிங்க், லைட் ப்ளூ உள்ளிட்ட நிற சட்டைகளுக்கு பிரவுன், நேவி, நீல நிற பேன்ட்டுகள் சிறந்த காம்பினேஷன்கள்.

மெரூன், ஊதா, டார்க் ப்ளூ, கறுப்பு போன்ற அடர்ந்த நிற ஷேடு சட்டைகளுக்கு பீஜ், க்ரீம், காக்கி மற்றும் சாம்பல் நிற பேன்ட்டுகள் சரியான சாய்ஸ்.

கட்டம்போட்ட சட்டைக்கு ப்ளெய்ன் பேன்ட்தான் பக்கா மேட்ச்.

நேவி ப்ளூ, மெரூன், சிவப்பு, பச்சை, கறுப்பு, வெள்ளை, ஊதா, டீல், பிங்க் மற்றும் சாம்பல் நிற சட்டைகளுக்கு சரியான காம்போ காக்கி பேன்ட்.

நீலம், மெரூன், ஆரஞ்சு, வெள்ளை, ஊதா, மஞ்சள், லைட் பிங்க் மற்றும் லைட் சாம்பல் நிற சட்டைகளுக்குக் கறுப்பு நிற பேன்ட் அணிந்தால் ஸ்டைலிஷ் தோற்றம் நிச்சயம்.

நீலம், பச்சை, சிவப்பு, கறுப்பு, லைட் பிங்க் மற்றும் டார்க் செர்ரி நிற சட்டைகளுக்கு சாம்பல் நிற பேன்ட் பக்கா மேட்ச்.

அலுவலகங்களுக்கு எப்போதும் வெள்ளை, லைட் ப்ளூ போன்ற நிற சட்டைகள்தான் சரியான தேர்வு. இவற்றுடன் பீஜ், அடர்ந்த சாம்பல் நிற பேன்ட்டுகள் அழகான ஃபார்மல் தோற்றத்தைத் தரும்.

கறுப்புச் சட்டையுடன் வெள்ளை பேன்ட் அல்லது நேவி ப்ளூ சட்டையுடன் காக்கி நிற பேன்ட் அணிந்தால், திருமணம் மற்றும் பார்ட்டிகளுக்கு க்ளாசிக் தோற்றம் நொடியில் பெறலாம்.

பெண்களுக்கான கலர் காம்போஸ்:

லட்சத்துக்கும் மேற்பட்ட ஷேடுகள் கொட்டிக்கிடப்பதனால் குர்த்தி, புடவை, சல்வார் கமீஸ், ஜீன்ஸ் – டி ஷர்ட் உள்ளிட்ட உடைகளில் சரியான காம்பினேஷன்கள் கண்டுபிடிப்பது கடினமான வேலை. இந்த ஷேடுகளில் கொஞ்சம் மாறினாலும், பலருக்குப் பிடிக்காது. ஆனால், பின்வரும் காம்பினேஷன்கள் என்றைக்குமே உபயோகிக்கக்கூடிய எவர்கிரீன் காம்போஸ்.

மஞ்சள் – பச்சை, வெள்ளை – நீலம், சிவப்பு – நீலம், வெள்ளை – பிங்க், கறுப்பு – பிங்க், நீலம் – பிங்க், ஆரஞ்சு – கறுப்பு, வெள்ளை – கறுப்பு உள்ளிட்ட காம்பினேஷன்கள் எல்லாவிதமான உடைகளுக்கும் பொருந்தும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Color combos for dress male and female fashion lifestyle tamil news

Next Story
தஞ்சாவூர் ஸ்பெஷல் சாம்பார் பொடி வீட்டிலயே எப்படி செய்யனும்னு தெரியுமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express