/tamil-ie/media/media_files/uploads/2020/02/Colors-Kodeeswari.jpg)
Colors Kodeeswari
Colors Kodeeswari : முதன் முறையாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியி,ல் பெண்களுக்கான பிரத்யேக ‘கேம் ஷோ’ ஒளிபரப்பாகி வருகிறது. ‘கோடீஸ்வரி’ என்ற அந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் கலந்துக் கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டி வருகிறார்கள். நிகழ்ச்சிக்கு அவ்வப்போது சுவாரஸ்யம் கூட்டுவதற்காக சினிமா பிரபலங்களும் கோடீஸ்வரியில் கலந்துக் கொண்டு தங்களது திரை அனுபவங்களை பகிர்ந்துக் கொள்கிறார்கள்.
'கமிட்டட்'கள் மிஸ் பண்ணாம பாக்க வேண்டிய 10 தமிழ் படங்கள்!
ஃபேஷன் துறையில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை விட்டுச் சென்ற வெண்டல் ரோட்ரிக்ஸ்
தவிர, விதவிதமான புடவைகள், அதற்கேற்ற ஆபரணங்கள், டிரடிஷனல், ட்ரெண்டி என நாள்தோறும் புதுப்பொலிவுடன் வரும் ராதிகாவை பார்ப்பதற்காகவே டிவி முன்பு குவிந்துக் கிடக்கிறார்கள் ரசிகைகள். அந்த வகையில் நேற்று அவர் அணிந்திருந்த சேலை ‘கிளாசிக் பிளாக் சில்க் சாரி’. பிளாக் வித் ப்ளூ காம்பினேஷனில் அந்த பட்டு சேலை நெய்யப்பட்டிருந்தது. இந்த மாதிரி காம்பினேஷனில், ப்ளூவிற்கு பதிலாக, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என அனைத்துக் கலர்களிலும் கிடைக்கும்.
வாட்ஸ்ஆப்பின் ‘மைல்ஸ்டோன்’ சாதனை… பயனர்களின் நம்பிக்கை தான் காரணம்!
#KodeeswariFashionTime By #RadikaaSarathkumar
இன்றைய கோடீஸ்வரி ஆடை, ஆபரணங்கள் குறித்து விளக்கும் உங்கள் ராதிகா சரத்குமார் ????????????????
#ColorsKodeeswari | @RealRadikaa | @SPNStudioNEXTpic.twitter.com/dcU19Sbg3S
— Colors Tamil (@ColorsTvTamil) February 12, 2020
ராதிகா அணிந்திருந்த அந்தப் புடவைக்கு மேட்சாக, ’பீக்காக் ஜலா ஜுவல்லரி’ என்ற ஆபரணங்களை அணிந்திருந்தார். பெரிய கற்கள் பதித்த அந்த நகைகள் புடவைக்கு ஏற்றவாறு எலிகண்ட் லுக்கைக் கொடுத்தன. கூடவே சங்கி வளையல்கள் பெர்ஃபெக்ட் ஈவ்னிங் தோற்றத்தைக் கொடுத்தன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.