Colors Kodeeswari : கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த டிசம்பர் 23-ம் தேதி முதல் ‘கோடீஸ்வரி’ நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. பெண்களுக்கான பிரத்யேக கேம் ஷோ-வான இதில் பல பெண்களும் கலந்துக் கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். அவ்வப்போது பிரபலங்களும் கலந்துக் கொண்டு நிகழ்ச்சியை சுவாரஸ்யப் படுத்துகிறார்கள்.
முகாம்களில் இருக்கும் யானைகளுக்கு வழங்கப்படும் உணவுகள் என்ன தெரியுமா?
அதோடு நிகழ்ச்சியைப் பார்க்க தூண்டுதலாக இருக்கும் இன்னுமொரு விஷயம், தொகுப்பாளினி ராதிகா அணிந்து வரும் காஸ்ட்யூம்கள் தான். அந்த வகையில் இன்று தான் அணிந்திருக்கும் ஆடை ஆபரணங்கள் குறித்து விளக்கியிருக்கிறார் ராதிகா. அதில், மஹாராஷ்ட்ரா, அவுரங்காபாத்தில் நெய்யப்படும் பைதனி சேலையை தான் அணிந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பியூர் ஜரிகை வைத்த ஹேண்ட் மேட் சேலை, இந்தியாவில் இருக்கும் அதிக விலை மதிப்புள்ள புடவைகளில் இதுவும் ஒன்று. இந்த கலர் காம்பினேஷனும், அதற்கேற்ற ஜரிகையும் எலிகண்டான லுக்கைக் கொடுப்பதாகக் கூறியுள்ளார் ராதிகா.
பாரதி கண்ணம்மாவில் வி.ஜே.மணிமேகலை: ஆகா செம்ம ட்விஸ்ட்!
புடவையில் பிங்க் நிறம் இருப்பதால், ஆபரணங்களிலும் பிங்க் கற்கள் இருக்கும்படி மேட்ச் செய்திருக்கிறார்கள். கிரிஸ்டர்ல், டைமண்ட், பேர்ல் ஆகியவற்றை மிக்ஸ் செய்து இந்த ஆபரணங்களை வடிவமைத்திருக்கிறார்கள். கற்கள் அதிகமாக இருப்பதால் இதன் வெயிட்டும் அதிகம், இருப்பினும் அட்டகாசமான டிரடிஷனல் லுக்கைக் கொடுக்கிறது பைதனி சேலையும், அதற்கான ஆபரணங்களும்!