Advertisment

’வெஸ்டர்ன்ல இருந்த என்ன ஹோம்லியா மாத்திட்டாங்க’ - ’திருமணம்’ ஜனனி

Colors Tamil, Thirumanam Serial : எந்த மாதிரியான புடவைகள் நல்லா இருக்கும் எனப் புரிய ஆரம்பிச்சதும், இப்போ நினைச்ச நேரமெல்லாம் புடவை ஷாப்பிங்தான்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thirumanam Serial Shreya Anchan

Thirumanam Serial Shreya Anchan

Shreya Anchan : கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்தவர், ஸ்ரேயா அஞ்சன்.

Advertisment

அறந்தாங்கி நிஷா கண்ணீர் வீடியோ: ‘பொண்ணாப் பொறந்தா இதை தாங்கித்தான் ஆகணும்’

கர்நாடக மாநிலம் மங்களூரில் பிறந்து வளர்ந்த அவர், அங்கேயே பள்ளிப்படிப்பையும் முடித்தார். மங்களூரில் உள்ள பெசண்ட் மகளிர் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். ஷ்ரேயாவுக்கு ஒரு சகோதரர் மற்றும் இரண்டு சகோதரிகள் உள்ளனர்.

கன்னடம் மற்றும் துலு திரைப்படங்களிலும் தமிழ் தொலைக்காட்சி துறையிலும் பணியாற்றி வருகிறார் ஷ்ரேயா. இயக்குநர் கிருஷ்ணா லெக்கானா இயக்கி, அர்வா நடித்த் கன்னட திரைப்படமான “சதுர்பூஜா” படத்தில் ஸ்ரேயா அறிமுகமானார். பின்னர் ராகுல் ரவி, நரசிம்ம ராஜு, விஜயகுமார், கிரண் போன்ற பிரபல கன்னட நடிகர்களுடனும் அவர் நடித்தார். "சதுர்பூஜா" படத்தில் அவரது நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றது.  இது 2014 ஆம் ஆண்டின் சிறந்த கன்னட படங்களில் ஒன்றாகும். தற்போது திருமணம் சீரியலில், முன்னணி கதாபாத்திரத்தில் (கதாநாயகி) சிந்துரனுடன் இணைந்து நடித்து வருகிறார்.

”தமிழ் சீரியலுக்கு வந்த புதிதில் சுத்தமா தமிழ் தெரியாது, டயலாக்கை இங்லீஷில் கேட்டு அதுக்கு தகுந்த மாதிரி ஃபேஸ் எக்ஸ்பிரஷன் கொடுத்துருவேன். ஆனால் டயலாக் சொல்ல படாத பாடுபட வேண்டியிருக்கும். நான் டயலாக் பேசி முடிச்சா, எல்லாரும் என்னை கலாய்ச்சு சிரிச்சுட்டு இருப்பாங்க. ஆனால், அடுத்தடுத்த எபிசோடுகள் வர தமிழ் நல்லாவே புரிய ஆரம்பிச்சுது. இப்போ நானும் தமிழ் நல்லா பேச ஆரம்பிச்சுட்டேன்” என தனது தமிழ் சீரியல் எண்ட்ரி குறித்து, ஒரு நேர்க்காணலில் குறிப்பிட்டிருந்தார் ஷ்ரேயா.

மேலும் தொடர்ந்த ஜனனி, “நான் மாடலிங் பண்ணிட்டு இருந்ததால், வெஸ்டர்ன் டிரஸ்கள், வெஸ்டர்ன் டைப் மேக்கப்கள், மூக்குத்திகள் என்னுடைய ஆல்டைம் ஃபேவரைட். ஆனால் சீரியலில் சாரீஸ்தான் என் காஸ்டியூம் என்றதும் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. புடவையை ஹேண்டில் பண்ண ரொம்பவே கஷ்டப்பட்டேன். சேலை செலெக்ட் பண்ணுவதிலும் சிரமப்பட்டேன். அதன் பின் டைரக்டரே சீனுக்கு தகுந்த மாதிரியான புடவைகளை என்னுடன் வந்து தேர்வு செய்து கொடுத்தாங்க. எனக்கு எந்த மாதிரியான புடவைகள் நல்லா இருக்கும் எனப் புரிய ஆரம்பிச்சதும், இப்போ நினைச்ச நேரமெல்லாம் புடவை ஷாப்பிங்தான். காட்டன், ஜார்ஜெட், சாஃப்ட் சில்க், ஹேண்ட்லும் என வெரைட்டியா பர்சேஸ் பண்றேன்” என்றார்.

ஷாப்பிங் போகிறீர்களா? கவனத்தில் வைக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள்

ஸ்ரேயாவுக்கு டான்ஸ் என்றால், பயங்கர க்ரேஸியாம். அம்மாவுக்கு நடிப்பு பிடிக்கும் என்பதால், 5 வயதில் பள்ளியில் நடிக்க ஆரம்பித்தாராம். தற்போது அதுவே கரியராக மாறியிருக்கிறது. உணவு என்றால் காண்டினெண்டல், தென்னிந்திய உணவுகளை ஒரு கை பார்த்து விடுவாராம் ஷ்ரேயா!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment