ஹேர் கலரிங் செய்ய பயமா? கட்டுக்கதைகளும் உண்மையும்!

Colour your hair at home myths and facts hair care Tamil News இப்போதெல்லாம் சந்தையில் விற்கும் பெரும்பாலான புதிய ஹேர் கலரிங் தயாரிப்புகள், பயன்படுத்தத் தயாராக இருக்கும் நிலையில் உள்ளன.

Colour your hair at home myths and facts hair care Tamil News
Colour your hair at home myths and facts hair care Tamil News

Colour your hair at home myths and facts hair care Tamil News : பண்டிகைக்காலம் ஆரம்பமாகிவிட்டது. உடைகள் முதல் சிகை அலங்காரம் வரை, தங்களை மெருகேற்றிக்கொள்வதற்கான காரணங்களில் இந்த திருவிழா கொண்டாட்டங்களும் ஒன்று. என்றாலும், தொற்றுநோய் இன்னும் தீவிரமடைந்து வரும் இந்தக் காலத்தில், முன்பு போல் வெளியே சென்று ஷாப்பிங் செய்வது குறைந்து, மக்கள் பெரும்பாலும் ஆன்லைன் ஷாப்பிங்கை தேர்வு செய்கின்றனர். அந்த வரிசையில் தங்களை மெருகேற்றிக்கொள்ள பியூட்டி பார்லர், சலூன் போன்ற இடங்களை தவிர்த்து, பலர் வீட்டிலேயே அத்தனை சேவைகளையும் தாங்களாகவே செய்துகொள்ள ஆரம்பித்திருக்கின்றனர்.

அந்த வகையில் ஹேர் கலரிங் பற்றிய ஏராளமான சந்தேகங்கள் பலருக்கும் எழுவதுண்டு. தலைமுடியை கலர் செய்யும்போது, ​​அது சரியான நிறத்தில் இருக்கும்போது அந்த தோற்றம் இரட்டிப்பு அழகைத் தருகிறது. உங்களுக்கு நரைமுடி இருந்தால், அவற்றை மட்டும் மறைப்பது அவசியமில்லை. உங்கள் முடியின் நிறத்தை மாற்றுவதன் மூலம் நீங்களே ஒரு முழுமையான புதிய அடையாளத்தை உருவாக்கலாம்.

ஹேர் கலரிங் ஒரு ஸ்டைலிஷ் மற்றும் ட்ரிக்கி விஷயமாகத் தோன்றினாலும், அதனை வீட்டிலேயே செய்ய விரும்புவோருக்கு அதன் செயல்முறையை எளிதாக செய்ய சில கட்டுக்கதைகளை அகற்றவேண்டும். அவை என்ன என்பதைப் பார்க்கலாம்.

ஹேர் கலரிங் செய்வதற்கான பேக்கை வீட்டில் நீங்களே செய்யும்போது, அதன் கலவை பற்றித் தெரிந்து கொள்வது கட்டாயமில்லை. உதாரணமாக, இயற்கையான ஹேர் கலரிங் பொருளான மருதாணிக்கு எந்த வெளிப்புற மூலப்பொருள் அல்லது பொருளுடன் கலவை தேவையில்லை. அதுமட்டுமில்லாமல், இப்போதெல்லாம் சந்தையில் விற்கும் பெரும்பாலான புதிய ஹேர் கலரிங் தயாரிப்புகள், பயன்படுத்தத் தயாராக இருக்கும் நிலையில் உள்ளன.

ஹேர் கலரிங் தொடர்பான மற்றொரு பிரபலமான கட்டுக்கதை, உங்கள் முடிக்கு ஏற்ற சிறந்த ஹேர் கலரிங் பொருள் எது என்பது சலூனில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும் என்பதுதான். ஆனால், நம் தலைமுடிக்குத் தேவையான பொருளை வாங்கும்போது, ​​அதில் என்ன பொருட்கள் உள்ளன, ரசாயனங்கள் அல்லது நச்சுகள் உள்ளதா மற்றும் ஆயுர்வேத மூலிகைகள் அல்லது தாவர சாறுகள் போன்ற இயற்கையான பொருட்கள் உள்ளதா என்பதை நாமே சரிபார்த்து வாங்கலாமே. உங்களை பற்றி உங்களைவிட வேறு யாருக்கு அதிகம் தெரிந்திருக்க முடியும்?

ஹேர் கலரிங் செய்யும் போது முடியின் கடைசி இழையை அல்லது உச்சந்தலையின் உச்சியை அடைய சலூனில் உள்ளவர்களுக்கு எந்தவிதமான கூடுதல் திறமையும் தேவையில்லை. எனவே, நீங்களும் இந்த ஹேர் கலரிங் வேலையை எளிமையாகச் செய்து முடிக்கலாம்.

ஆம், உங்களால் தலைமுடியை அழகாக சீவியெடுக்க முடியுமென்றால், ஹேர் கலரிங் வேலையையும் முழுமையாக செய்து முடிக்க முடியும். சலூன்களில் பயன்படுத்தப்படும் நிறங்கள் பெரும்பாலும் அம்மோனியா அல்லது அதன் துணை தயாரிப்புகளான எத்தனோலாமைன், டைடனோலாமைன் மற்றும் ட்ரைஎத்தனோலாமைன் போன்றவற்றை உள்ளடக்கியது. இவை உங்கள் கூந்தலை சேதப்படுத்தும். ஆனால், உங்கள் சொந்த ஹேர் கலரை நீங்கள் தேர்வு செய்யும்போது, அவை அமினோமெதைல் ப்ரோபனோல் போன்ற கரிம சேர்மங்கள் இல்லாத வகையில் தேர்வு செய்யலாம். மேலும், எந்த தீங்கும் அல்லது பக்க விளைவுகளையும் அவை ஏற்படுத்தாது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Colour your hair at home myths and facts hair care tamil news

Next Story
ஸ்டார் ஹோட்டல், 9 லட்சம் வியூஸ், கோபிநாத் என்ட்ரி – மைனா நந்தினி ட்ரெண்டிங் யூடியூப் வீடியோ!Myna Nandhini Youtube Channel Trending Video Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com