புளித்த தயிருடன் இதை சேருங்க… பல மாத பாத்ரூம் கறையை ஈஸியா கிளீன் பண்ணலாம்!

வீட்டு பாத்ரூம் அங்கங்கே கறையாக உள்ளதா, கடுமையாக தேய்த்தும் கறை போகவில்லையா கவலைப்படாதீர்கள். பாத்ரூம் கறையை சுத்தம் செய்ய புளித்த தயிருடன் இந்த பொருட்களை சேருங்கள், பாத்ரூமில் பல மாதங்கள் படிந்திருந்த கறையை ஈஸியாக கிளீன் பண்ணலாம்.

author-image
WebDesk
New Update
bath

வீட்டு பாத்ரூம் கறையாக இருந்தால் கவலைப்பட வேண்டாம், புளித்த தயிருடன் இந்த பொருட்களை சேர்த்து ஒரு கரைசலைத் தயாரித்து லேசாக தேய்த்தால் பாத்ரூமில் பல மாதங்கள் படிந்திருந்த கறையை ஈஸியாக கிளீன் பண்ணலாம். Image Source: youtube/Fresh Feat

வீட்டு பாத்ரூம் அங்கங்கே கறையாக உள்ளதா, கடுமையாக தேய்த்தும் கறை போகவில்லையா கவலைப்படாதீர்கள். பாத்ரூம் கறையை சுத்தம் செய்ய புளித்த தயிருடன் இந்த பொருட்களை சேருங்கள், பாத்ரூமில் பல மாதங்கள் படிந்திருந்த கறையை ஈஸியாக கிளீன் பண்ணலாம்.

Advertisment

பொதுவாக பாத்ரூமில் டைல்ஸில் உப்புத் தண்ணீர் கறை படிந்து கருப்பாக இருக்கும். சில நேரங்களில் ஓரிரு நாள் கிளீண் பண்ணாமல் விட்டால்கூட பாத்ரூமில் உள்ள டைல்ஸ் கறைபடிந்து கருப்பாகிவிடும். பிறகு அவை கடுமையாக தேய்த்தாலும் போகாது. அப்படி உங்கள் வீட்டு பாத்ரூம் கறையாக இருந்தால் கவலைப்பட வேண்டாம், புளித்த தயிருடன் இந்த பொருட்களை சேர்த்து ஒரு கரைசலைத் தயாரித்து லேசாக தேய்த்தால் பாத்ரூமில் பல மாதங்கள் படிந்திருந்த கறையை ஈஸியாக கிளீன் பண்ணலாம் என்று ஃபிரஷ் ஃபீட் (Fresh Feat) என்ற யூடியூப் சேனலில் ஒரு சூப்பரனா டிப்ஸ் வழங்கியிருக்கிறார்கள். அதை அப்படியே உங்களுக்கு தருகிறோம்.

வீட்டு பாத்ரூமில் படிந்த கறையை கடுமையாக தேய்த்தும் கறை போகவில்லையா, ஒரு 5 ரூபாய் செலவில் இந்த கறையை எளிதாகப் போக்கிவிடலாம். முதலில் ஒரு பவுல் எடுத்துக்கொள்ளுங்கள். அதில், 2 பாக்கெட் சீயக்காய் தூள் போடுங்கள். அதில் 1 பாக்கெட் ஷாம்பூ சேருங்கள். அதனுடன் 2-3 நாள் நன்றாக புளித்த தயிர் சேருங்கள். ஒருவேளை உங்கள் வீட்டில் தயிர் இல்லை என்றால், நன்றாக புளித்த மாவு சேர்த்துக்கொள்ளலாம். அதை நன்றாகக் கலக்குங்கள்.

Advertisment
Advertisements

பிறகு, இதை பாத்ரூமில் எங்கே எல்லாம் கறை இருக்கிறதோ, அங்கெல்லாம் ஊற்றி ஸ்கிரப் வைத்து தேயுங்கள். பாத்ரூம் கறை நீங்கி டைல்ஸ் பளிச் என இருக்கும். உங்கள் வீட்டில் இதை ட்ரை பண்ணி பாருங்கள்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: