Comedian Madurai Muthu Car Collection Viral Video Tamil news : “15 ஆண்டுகளுக்கு முன்பு இண்டிகா கார் வாங்கியபோது என்ன சார் இந்த கார் வாங்கிருக்கீங்க? அட்வைஸ் பேருல அரை உயிரை எடுத்துட்டாங்க. ஆனால், இப்போது நம்மகிட்ட ஆடி கார், பென்ஸ் கார் என்று எல்லாமே இருக்கிறது” என்றபடி தன்னுடைய வழக்கமான பாணியில் கடி ஜோக்ஸ்களை மென்றுகொண்டே தன்னுடைய கார் டூர் விடியிற்கு நம்மை அழைத்துச் சென்றார் மதுரை முத்து. கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நம்மை என்டெர்டெயின் செய்த இவர், தற்போது தனக்கென தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனலையும் ஆரம்பித்து, அதிலும் பல காணொளிகளைப் பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

“கார் எடுக்கும்போது, ஆயில் இருக்கா, பிரேக் இருக்கா சரிபார்ப்பதைவிட முதலில் 4 டயர் இருக்கா என்பதை செக் பண்ணனும். கார் டூர் என்றுகூறிவிட்டு வாய்ப்பேச்சுதான் அதிகம் இருக்கு வண்டியை காட்டமாடிக்குறாங்க” என்றபடி மக்களின் மைண்ட் வாய்சை சத்தமாகப் பேசிவிட்டு தன்னுடைய இன்னோவா காரை சுற்றிக் காட்டினார்.
“இதுதான் என்னுடைய டொயோட்டா இன்னோவா கார். 6 கார்களுக்கு பிறகு வாங்கிய கார் இது” என்றபடி அதன் லைட்ஸ் மேஜிக்கை காண்பித்தார். “மொபைலில் அழைப்பு வந்தால் அடிக்கடி டென்ஸன் ஆகிவிடும் என்பதால், நான் வண்டியை அதிகம் ஒட்டுவதில்லை. ட்ரைவர்தான் எப்போதும். நான் சாமிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால், என் அப்பா ஆஞ்சநேயர் பக்தர். அவருக்காகக் கோவில்கூட கட்டியிருக்கிறார். எனக்கு என் அப்பா மிகவும் பிடிக்கும் என்பதால், அவருக்கு மிகவும் பிடித்த இந்த ஆஞ்சநேயரை வைத்திருக்கிறேன்” என்றபடி பறக்கும் ஆஞ்சனேயர் காண்பித்தார்.

பிறகு, “பின்னாடி இரண்டு டிவி இருக்கு, நீண்ட தூரம் போகவேண்டுமென்றால் எனக்கு பிடித்த எம்ஜிஆர் படம் பார்த்துக்கொண்டே செல்வேன். உள்ளேயே ஒரு மினி ஃப்ரிட்ஜ், க்ளட்ச், ஸ்டியரிங் இருக்கு” என்று வழக்கம்போல மொக்கை போடத் தொடங்கினார். “நான் எப்போதுமே பின் சீட்டில்தான் உட்காருவேன். பார்த்தீர்களா ஃபிளைட்டில் இருப்பதுபோன்று டிவி, சாப்பாடு சாப்பிட டேபிள், சார்ஜ் பாயிண்ட் எல்லாம் இருக்கு” என்றபடி அசார் அறிவுரையின் பேரில் மேலே ஃபால்ஸ் சீலிங் போன்ற அமைப்பைக் காட்டினார்.

“எனக்கு தத்துவப் பாடல்கள் கேட்டுக்கொண்டே பயணம் செய்ய மிகவும் பிடிக்கும். ஒரு தத்துவ பாடல் 10 புத்தகங்களுக்குச் சமம். அதனால், அந்தத் தொகுப்பு எப்போதுமே என்னுடன் இருக்கும். நம் வீட்டை எப்படி நாம் சுத்தம் செய்து வைத்துக்கொள்வோமோ, அதேபோன்று தான் காரையும் சுத்தம் செய்து வைத்துக்கொள்வேன். எப்போதுமே வாகனத்தை தெய்வம் போல வணங்குவேன். ஏனென்றால், நான்கு முறை என்னை விபத்திலிருந்து இது காப்பாற்றி உள்ளது.
ஸ்கார்பியோ வண்டி வைத்திருந்தபோது 30 அடி ஆழத்தில் கார் விழுந்தது. அப்போது இவ்வளவு காயத்தில் ஒரு மனிதர் பிழைக்க வாய்ப்பில்லை என்று மருத்துவரே சொன்னார்கள். அந்த அளவிற்கு என்னைக் காப்பாற்றியுள்ளது. எப்போதுமே கும்பிட்டு தான் எடுப்பேன்” என்று கூறிக்கொண்டே ஸ்பீக்கர், டயரை பார்ப்பதற்கான ஸ்பெஷல் கண்ணாடி ஆகியவற்றைக் காட்டினார். பிறகு டயர் மற்றும் காரை துடைத்தும் காட்டினார்.
பிறகு ஆடி கார் என்றபடி தன்னுடைய கருப்பு நிற ஸ்விஃப்ட் காரை காட்டினார். இதற்கு ஏன் ஆடி கார் என்று பெயர் வந்தது என்றால், அதனை ஆடி மாதத்தில் வாங்கினார்களாம். அதுமட்டுமல்ல, பெஞ்சில் உட்கார்ந்தபடி கையில் பொம்மை கார் ஒன்றைக் காட்டி, இதுதான் என்னுடைய பென்ஸ் கார் என்கிறார். முடியல!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil