/tamil-ie/media/media_files/uploads/2019/11/a544.jpg)
comedian madurai muthu wife sun tv - குடும்பத்துக்காக தன்னையே அர்ப்பணித்த மனைவியின் மரணம் - மீண்டு வந்த மதுரை முத்துவின் மற்றொரு பக்கம்!
வடிவேலு, சந்தானம், போன்ற காமெடியன்களை பார்த்தாலே சிரிப்பு வரும். அந்த வரிசையில் சின்னத்திரையில் இவரைப் பார்த்தாலே, ரசிகர்கள் சிரிக்கத் தொடங்கிவிடுவார்கள். அவர், மதுரை முத்து....
சன் டிவியின் மிக முக்கிய காமெடியன் என்றால் அது மதுரை முத்து தான். பட்டிமன்றங்கள், `அசத்தப்போவது யாரு', `கலக்கப்போவது யாரு' போன்ற காமெடி நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, சன் டிவியில் 'சன்டே கலாட்டா' எனும் சூப்பர் ஹிட் ஷோவை சாத்தியப்படுத்தியவர். சின்னத்திரை, பெரிய திரை என்றும் எப்போதும் பிசியாகவே இருந்த முத்துவின் வாழ்க்கையில் மிகப்பெரிய சோகம் என்றால், அவரது முதல் மனைவி வையம்மாளை இழந்ததுதான். இதனை அவரே பலமுறை கூறியிருக்கிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/11/a545-300x200.jpg)
மதுரையில் நடந்த ஒரு மேடை நிகழ்ச்சியில் இருவரும் முதன் முதலாக சந்திக்க, இருவரும் காதலிக்கத் தொடங்கி பிறகு தம்பதிகளானார்கள். கல்யாணத்திற்குப் பிறகு முத்துவுக்காகவும், குழந்தைகளுக்காகவும் தன்னோட வாழ்க்கையை அர்ப்பணித்த வையம்மாள், தீவிரமான காளி பக்தையாவார்.
கடந்த 2016ம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றிற்காக அமெரிக்கா சென்ற மதுரை முத்துவுக்கு அம்மை தாக்கியது. கணவருக்கு அம்மை தாக்கியதை அறிந்து துடித்துப் போன வையம்மாள், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலுக்கு சென்று கணவருக்காக சிறப்பு பூஜை செய்ய, காரில் சென்றுகொண்டிருந்தபோதுதான் சாலை விபத்து ஏற்பட்டு இறந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/11/a542-300x200.jpg)
அப்போது இரண்டு பெண் குழந்தைகளை வைத்து தவித்துக் கொண்டிருந்த முத்து, பிள்ளைகள் 'அம்மா எங்கே?' என்று ஒவ்வொரு முறை கேட்கும் போதும், 'கோயிலுக்கு போயிருக்காங்க... வந்துடுவாங்க-னு' ஒவ்வொரு முறையும் சொல்லி, வெளியே சொல்ல முடியாத வேதனையை அனுபவித்து வந்தார்.
கையில் குழந்தைகள், பணிகள் ஒருபக்கம், வயதான பெற்றோர் ஒருபக்கம் என தவித்த முத்து, சில மாதங்களில் தனது மனைவி வையம்மாளின் தோழியான நீத்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் பிள்ளை உள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2019/11/a543-300x199.jpg)
திரையில் ரசிகர்களை சிரிக்க வைக்கும் காமெடியன்கள் வாழ்க்கையில் தான் எத்தனை எத்தனை சோகங்கள்!.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us