தினமும் பல் துலக்குவது போல, தினமும் தலைமுடியை வாருவது அவசியம். நீங்கள் நம்பினாலும், இல்லையென்றாலும், இந்த எளிய செயல்பாடு உங்கள் தலைமுடிக்கு அதிசயங்களைச் செய்யும். இது நீங்கள் தினமும் கடைபிடிக்க வேண்டிய ஒரு முடி பராமரிப்பு வழக்கம்.
தேய்கா ஆர்கனிக்ஸ்(Deyga Organics) இன் நிறுவனர் ஆர்த்தி ரகுராம் கூறுகையில், வறண்ட முடி உள்ளவர்கள் அல்லது முடி உதிர்தலுக்கு ஆளாகக்கூடியவர்கள் கூடுதல் முடி இழப்பதைத் தவிர்ப்பதற்காக முடியை வாருவதில் தயக்கம் காட்டுகின்றனர்.
"ஆனால், முடியை வாருவது ஒரு சுய பாதுகாப்பு நடைமுறை மட்டுமல்ல, அது வெளிப்படையான அறிவியல் நன்மைகளைக் கொண்டுள்ளது. காலையில் ஒரு முறை மற்றும் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு முறை என ஒரு நாளைக்கு இரண்டு முறை முடி வாருவது ஒரு விதிமுறை. முடியின் நீளம் மற்றும் அமைப்பைப் பொறுத்து இந்த விதிமுறை ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். உதாரணமாக, நீண்ட கூந்தல் உள்ளவர்கள் முடிச்சுகள் மற்றும் உடைப்புகளைத் தடுக்க ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறை முடியை வார வேண்டும்,” என்று அவர் அறிவுறுத்துகிறார்.
ரகுராம் ஒவ்வொரு நாளும் முடியை வாருவதால் பின்வரும் நன்மைகளை பட்டியலிடுகிறார்.
* உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது
சீப்பு கொண்டு முடியை வாருவது, உச்சந்தலையின் நுண்குழாய்களில் செயல்படுகிறது, இது ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை மயிர்க்கால்களுக்கு திறம்பட கொண்டு செல்ல உதவுகிறது, இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது, முடி வேர்களுக்கு ஊட்டமளிக்கிறது, வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் முடி உதிர்வை குறைக்க உதவுகிறது.
* இயற்கை எண்ணெய்களைத் தூண்டி விநியோகம் செய்கிறது
உச்சந்தலையில் உள்ள செபாசியஸ் சுரப்பிகள் எண்ணெய்யை உற்பத்தி செய்கின்றன, இது இயற்கையாகவே முடியை நிலைநிறுத்தி பாதுகாக்கிறது. கூந்தலை வாருவது, செபாசியஸ் சுரப்பிகளைத் தூண்டுகிறது, இது இயற்கை எண்ணெய்கள்’ சீபம்-லிருந்து இருந்து முடியின் வேர் வரை, தண்டு முழுவதும் சரியாக விநியோகிக்கப்படுவதை உறுதி செய்கிறது.
*உச்சந்தலையை எக்ஃபாலியேட் செய்கிறது
வழக்கமாக கூந்தல் வாருவது, பழைய முடி, இறந்த சரும செல்கள், முடி தயாரிப்பு எச்சங்கள் (hair product residues), அழுக்கு மற்றும் உங்கள் முடி மற்றும் உச்சந்தலையின் வேரில் இருக்கும் மற்றவற்றை சுத்தம் செய்ய உதவுகிறது. மேலும் கூந்தலை சீவுவது, உச்சந்தலையின் துளைகளை அவிழ்த்து, உச்சந்தலையையும் கூந்தலையும் சுவாசிக்க அனுமதிக்கிறது மற்றும் மந்தமான, பொடுகு நிறைந்த முடிக்கு புத்துயிர் அளிக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”