பிரதமர் நரேந்திர மோடி மேக் அப் போட அவரின் மேக் அப் மேனுக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கிறாரா என்ற காங்கிரஸ் பிரமுகரின் விவரம் அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, பல நிகழ்ச்சிகளிலும் வெளிநாட் பயணங்களையும் அதிகமாக மேற்கொள்பவர். அவர் எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊரின் கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது பாரம்பரிய உடைகளை அணிந்துகொள்வார்.
நரேந்திர மோடி மேக் அப் வதந்தி
வித விதமான தொப்பிகள், காலனிகள், உடைகள் என பல அவதாரங்களில் தோன்றுவதை நாம் பார்த்திருக்கிறோம். அதே போல் அவரின் சருமம் சற்று பொலிவுடன் இருப்பதை பார்த்த பலரும் அவர் விலை உயர்ந்த காலான் சாப்பிடுவதாலேயே அவர் வெள்ளையாக இருக்கிறார் என்ற வதந்தியும் அதிகமாக பரவியது.
ஆனால் இந்த வதந்தியையெல்லாம் ஓவர்டேக் செய்துவிட்டது காங்கிரஸ் பிரமுகர் ஆதித்யா சவுத்ரியின் முகநூல் பதிவு.
/tamil-ie/media/media_files/uploads/2018/10/narendra-modi-make-up-man-salary.jpg)
அவர் தனது பதிவில், பிரதமர் மோடி அழுவகையை தொடங்குவதற்கும், நிறுத்துவதற்கும் மேக் அப் போடுவதாகவும், அந்த மேக் அப் போடுவதற்கு 15 லட்சம் ரூபாய் சம்பளம் அளிக்கப்படுவதாகவும் ஒரு புகைப்படத்துடன் பதிவு பகிர்ந்துள்ளார். இதனை சுமார் 16 ஆயிரத்து 800க்கும் மேற்பட்டோர் பகிர்ந்துள்ளனர்.
ஆனால் ஆதித்யா சவுத்திரியின் இந்த பதிவை பார்த்த பலரும் இந்த புகைப்படம் போலி என்று அடையாளம் கண்டுகொண்டனர்.
டெல்லியில் அமைந்து மேடம் துசாரஸ் மெழுகு பொம்மை அருங்காட்சியகத்தில், மோடியின் மெழுகு சிலை உருவாக்க அவரின் அடையாளங்கள் மற்றும் உடல் அளவு எடுக்கப்பட்டது. அப்போது ஒரு பெண் மோடியின் கண்களுக்கு இணையாக இருக்கும் பொம்மை கண்களை அருகில் வைத்து ஒப்பிட்டு பார்த்து கொண்டிருந்தார். இதை தான் காங்கிரஸ் பிரமுகர் மேக் அப் என்று பகிர்ந்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/10/narendra-modi-make-up-man-salary-2-1024x542.jpg)
அவரின் இந்த பதிவை கண்ட பலரும், ‘என்னது மோடியின் மேக் அப் மேனுக்கு 15 லட்சம் சம்பளமா?’ என்று வாயை பிளந்து நின்றனர்.